கமலை ஒரு முறை தொட்டால் போதும்.! வெளிப்படையாக கூறிய சூப்பர் ஸ்டார்.!
உலகநாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க பல்வேறு திரை பிரபலங்கள் காத்துக்கிடக்கின்றனர். அவருடன் ஒரு படத்திலாவது நடித்தால் போதும் என்கிற மனநிலையில் பலரும் இருக்கின்றனர். அந்த ஆசையை பலர் வெளிப்படையாக கூறியுள்ளார். அதில் சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
அப்படி ஒருவர் தான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவர் கமலுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும். அவரை ஒரு முறையேனும் தொட்டு பார்க்கவேண்டும் என்பது அவரது ஆசையாம். அதனை, அவர் ஒரு விருது மேடையிலேயே குறிப்பிட்டார்.
இதையும் படியுங்களேன் -
சூர்யா படத்தை வெளியிட மறுக்கும் படக்குழு.! ஏக்கத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்.!
அதற்கு முன்னதாக அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. கமல் எழுதி, இயக்கி , நடித்த திரைப்படமே ஹே ராம். இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஷாருக்கான் நடித்திருப்பார். அதில் ஷாருக்கான் அவரே டப்பிங் பேசியிருப்பார். இந்த பட ஷூட்டிங் முடிந்த பிறகு ஷாருக் அவரது மனைவியிடம், இன்று நான் கமலை நேரில் சந்தித்து அவரை தொட்டு பார்த்து விட்டேன் என கூறி சந்தோசப்பட்டு கூறினாராம்.
இந்த படத்தில் நடித்ததற்காக ஒரு பைசா கூட ஷாருக்கான் சம்பளம் வாங்கவில்லையாம். இதனை கமல் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.