இது தான் எங்கள் சூப்பர் ஸ்டார்.! அரசாங்கமே அறிவித்து விட்டது வேற என்ன வேணும்.?!

தமிழ் சினிமாவில் என்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட இந்த முதல் இடத்தை 40 வருடங்களாக தக்க வைத்து வருகிறார். இது உண்மையில் அவரது ஸ்டைலான நடிப்பிற்கு ரசிகர்கள் கொடுக்கும் மரியாதை என்றே கூறலாம்.
அதேபோல் தற்போதும் தமிழில் அதிகபட்சமாக ஒரு படத்திற்கு சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதன்மையானவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறார். பலரும் கூறலாம், எங்களது ஆஸ்தான நடிகர் தான் நம்பர் 1. அவர்தான் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்குகிறார் என்று.
ஆனால், அதனை எல்லாம் பொய்யாக்கும் விதமாக அரசாங்கமே தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டு, விருதும் கொடுத்து கவுரவித்து உள்ளது. அதாவது இன்று வருமானவரித்துறை தினம் கொண்டாடப்படுகிறது. அதில் தமிழகத்தில் இருந்து அதிக வருமான வரி செலுத்தும் நபர் என்ற விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெற்றுள்ளார். புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இந்த விருதை அவருக்கு வழங்கினார்.
ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் எனும் திரைப்படம் தயாராக உள்ளது. அந்த திரைப்படத்திற்காக ரஜினி 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தற்போது தகவல் ஒன்று சென்று வருகிறது.