Connect with us
kamal 1

Cinema News

Kamal: குள்ளம்னு ஒதுக்கிய பாலிவுட்! தமிழுக்கு ராஜாவா இருக்கும் போது ஹிந்தில எலியா இருக்க விரும்பாத கமல்

Kamal: இந்திய சினிமாவிலேயே இதுவரை நடித்த நடிகர்களில் ஒரு சிறந்த நடிகராக கருதப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். நடிகராக மட்டுமில்லாமல் பாடகராக, பாடலாசிரியராக, மேக்கப் கலைஞனாக என பன்முகத்திறமைகள் கொண்ட நடிகராகவும் கமல் இருந்தார். முதன் முதலில் 1960 ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கமல்.

சினிமாவில் துவக்கம்: 6 வயதில் தொடங்கி தற்போது வரை 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் கமல். களத்தூர் கண்ணம்மாவில் இவருக்கு பதிலாக வேறொரு குழந்தை நட்சத்திரத்தை நடிக்க வைக்க ஏற்பாடு நடந்தது. ஆனால் மெய்யப்ப செட்டியார் கண்டெடுத்த முத்துவாக கமல் விளங்கினார். இல்லையென்றால் கமலை இந்த சினிமா தவறவிட்டிருக்கும்.

இதையும் படிங்க:KGF: களவாணி படத்தில் நடித்திருக்கும் கேஜிஎஃப் யாஷ்… இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே…

பல விருதுகள்: இந்திய சினிமாவின் உயரிய சிவிலியன் விருதுகளான பத்ம ஸ்ரீ, பதம் பூஷன் விருதுகளை வென்றிருக்கிறார். தமிழக அரசின் விருதுகளையும் பெற்றிருக்கிறார். தென்னிந்திய படங்களை தவிர வங்க மொழிகளிலும் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பல மொழிகளில் கமல் நடித்திருக்கிறார். அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் இந்தியன் 2.

அந்தப் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் கமல். தற்போது கமல் அமெரிக்காவில் தங்கி சினிமா சம்பந்தப்பட்ட படிப்புகளை படித்து வருகிறார். தமிழில் கொடி கட்டி பறந்த கமல் ஏன் ஹிந்தியில் வரவில்லை என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது.

krishna

krishna

ஹிந்தியில் வெளியாகி பெரிய வெற்றிப்பட்ட திரைப்படம் ஏக் துஜே ஹேலியே படம். கமல் நடிப்பில் வெளியான இந்தப் படம் நல்ல வசூலை பெற்றது. அதன் பிறகு சாஹர் என்ற படத்திலும் நடித்தார் கமல். அப்படியிருந்தும் அவரால் ஹிந்தியில் சாதிக்க முடியவில்லை. அதற்கு காரணம் ஆடியன்ஸ்கள் குறைவாக இருந்ததனால்தான் என கவிதாலயா கிருஷ்ணன் கூறினார்.

இதையும் படிங்க: அமரன் படம் பார்க்க தனி விமானத்தில் வந்த சூர்யா – ஜோதிகா!… யாருக்காவது தெரியுமா?!..

குள்ளம்னு ஒதுக்கிய பாலிவுட்: அதுமட்டுமில்லாமல் இவரை குள்ளம் என்று கூட அங்கு விமர்சனம் செய்தார்களாம். அப்படிப்பார்த்தால் அமீர்கான் கூட குள்ளம்தான் .அதோடு அங்கு சில பாலிட்டிக்ஸும் நடந்ததாக கவிதாலயா கிருஷ்ணன் கூறினார். அதாவது இந்த குரூப் மட்டும்தான் ஹிந்தியில் ஆக்கிரமிக்க முடியும் என்ற பாலிட்டிக்ஸ் இருந்ததாக கூறினார். இதனால்தான் கமல் ஹிந்தியில் தொடர்ந்து நடிக்கவில்லை என்றும் தமிழுக்கு ராஜாவாக இருக்கும் போது ஹிந்தியில் எலியாக இருக்கவேண்டாம் என ஒதுங்கி விட்டதாக கவிதாலயா கிருஷ்ணன் கூறினார். ஆனால் ஒரு நல்ல நடிகரை ஹிந்தி சினிமா தவறவிட்டது என்றும் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top