Cinema History
திணறிய கண்ணதாசன்!. தட்டித் தூக்கிய அந்த இளைஞன்!.. வியந்து போன எம்.எஸ்.வி!..
தமிழ்த்திரை இசைக்கலைஞர்கள் இன்று வரை கொண்டாடுகிற ஒரு கலைஞர் என்றால் அது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். தனது முதல் பாடலைப் பதிவு செய்வதற்கு முன் எப்படிப்பட்ட சூழலில் இருந்தார் அவருக்கு சினிமா வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று பார்ப்போமா…
‘பாசவலை’ படத்திற்கு இசை அமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன். பாடல்களை எழுதியது மருதகாசியும், கவியரசர் கண்ணதாசனும். ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு அவர்கள் இருவரும் பாடலை மாற்றி மாற்றி எழுதிக் கொடுத்தாங்க. ஆனா எந்தப் பாடலுமே சரியாக அமையவில்லை.
இதையும் படிங்க… பிரபாஸோட அடுத்த படம் இதுதான்!.. மத்த படங்களை தூக்கி கிடப்புல போட்ட கல்கி ஹீரோ!.. ஷூட்டிங் எப்போ?
அப்படிப்பட்ட சூழலில் தான் அந்தப் படத்தின் தயாரிப்பு நிர்வாகிகளுள் ஒருவராக இருந்த சுலைமான் என்பவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். ‘எனக்குத் தெரிந்த பாடலாசிரியர் இளைஞர் இந்த சூழலுக்குப் பாடல் எழுதித் தந்துள்ளார். இது பொருந்துமா என பாருங்கள்’ என்று எம்எஸ்.வி.யிடம் சொன்னார்.
அதற்கு ‘சுலைமான் கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? ரெண்டு பெரிய கவிஞர்களே இங்கு பாடல் எழுத முடியாம தவிச்சிக்கிட்டு இருக்காங்க. யாரோ புதுப்பையன் எழுதுனான்னு கொண்டு வந்து இங்க நீட்டுறீங்களே’ என்றார் எம்எஸ்.வி. திரும்ப அவரை அனுப்பி வைத்து விட்டார். இந்த சம்பவம் நடந்து 3 நாள்கள் ஆகியும் பாடல் அவர்களுக்கு அமையவில்லை. அந்த சூழலில் மீண்டும் அந்த இளைஞனை சுலைமான் அழைத்து வந்தார்.
இந்தப் பாட்டை ‘ஒருமுறை படிச்சித்தான் பாருங்களேன். நல்லா இருந்தா வச்சிக்கங்க. இல்லேன்னா பாட்டை அவருக்கிட்டேயே கொடுத்துடுங்க’ என்றார் சுலைமான். உடனே அவரது நச்சரிப்பு தாங்க முடியாம எம்எஸ்.வி. வாங்கிப் படித்துப் பார்த்தார்.
இதையும் படிங்க… சென்னை வந்தாலும் சூர்யா வீட்டில் தங்காத ஜோதிகா!.. அப்படி என்ன பஞ்சாயத்து?!…
‘குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம். குள்ள நரி மாட்டிக்கிட்டா குறவனுக்கு சொந்தம். தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்’ என்ற அந்தப் பாடல் வரிகளைப் படித்ததும் எம்எஸ்.வி. அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. இதை விட அந்தக் காட்சிக்குப் பொருத்தமான வரிகள் இல்லை. அந்தப் பாடல் தான் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரத்தை தமிழ்சினிமாவுக்கு வரவழைத்தது.
இனி எந்தப் புதுப்பாடலாசிரியரும் பாடல் எழுதி வந்தால் அலட்சியப்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தையும் அந்தப் பாடல் தான் எம்எஸ்வி.யின் மனதில் கொண்டுவரச் செய்தது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.