ஹிட் 4 படத்தில் கார்த்தி நடிக்கிறாரா? அப்படின்னா படம் தூள்தான்!

by sankaran v |   ( Updated:2025-05-03 21:46:26  )
hit 3 karthi
X

hit 3 karthi

Hit 4: நானி நடிப்பில் ஹிட் 3 படம் கடந்த வாரம் வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது. படம் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்தப் படத்தின் 4ம் பாகத்தில் நடிகர் கார்த்தி நடிப்பது இந்த 3ம் பாகத்திலேயே உறுதியாகி விட்டது. ஹிட் 3 படத்துக்கு தமிழ்நாட்டுல எப்படி வரவேற்பு இருக்கு?

ஹிட் 4 படத்தைத் தெலுங்குல எடுத்து தமிழ்ல டப் பண்ணுவாங்களா இல்லன்னா முழுமையா தெலுங்குல தான் உருவாக வாய்ப்பு இருக்கான்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.

கார்த்தி கதாநாயகனா நடிக்க ஹிட் 4 படம் உருவாகும்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும்தான் உருவாகும்னு நான் நினைக்கிறேன். கார்த்தியைப் பொருத்தவரைக்கும் தமிழ்ல நல்ல மார்க்கெட் இருக்கு. தெலுங்கிலும் நல்ல செல்வாக்குள்ள நடிகராக கார்த்தி இருக்கிறார். தமிழ்நாட்டுல ஹிட் 3 திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஹிட் 3 படத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யா ஸ்ரீனிவாஸ், சமுத்திரக்கனி, நெப்போலியன், ரவீந்திர விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சாலேஷ் கொலனு எழுதி இயக்கியுள்ளார்.

தற்போது ஹிட் படத்தின் வசூல் ரெட்ரோ சாதனையை முறியடித்துள்ளது. சேக்நில்க் அறிக்கையின் படி முதல் நாளில் 21 கோடியும், 2வது நாளில் 10.5 கோடியும், 3வது நாளில் 10.25 கோடியும் வசூலித்துள்ளது. மொத்தம் 41.75 கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் ரெட்ரோ 3 நாளில் இந்திய அளவில் மொத்த வசூல் 34.75கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணன் சூர்யாவின் ரெட்ரோ படத்தைத் தட்டித் தூக்கியுள்ளது ஹிட் 3 பட வசூல். அந்த வகையில் ஹிட் 4 படத்தில் கார்த்தி நடிப்பது அண்ணனுக்கே போட்டியாகி விடுவாரோ என்றே தெரிகிறது. அண்ணனுக்குப் பிறகு வந்து மார்க்கெட்டை உயர்த்தி வருவது திரையுலகையே ஆச்சரியப்பட வைக்கிறது.

Next Story