More
Categories: Cinema News latest news

மற்ற மொழில் சூப்பர் ஹிட்டாகி தமிழில் ஃபிளாப் ஆன 5 படங்கள்!.. தளபதியும் இதுக்கு தப்பலயே!..

வேறு மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தை தமிழில் ரீமேக் செய்வது ஒன்றும் புதிதல்ல. அதே போல தமிழில் வெளியாகும் பல படங்கள் ஹிட்டான பிறகு, வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்படுவதும் வழக்கம் தான். ஆனால் ரீமேக் செய்யப்பட்ட எல்லா படங்களும் ஹிட்டாகி விடாது. ரீமேக் படங்களாக இருந்தாலும், கதைக்கேற்ற ஹீரோ, ஹீரோயினை தேர்வு செய்வது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் காட்சியமைப்பது என பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதில் ஏதாவது மிஸ் ஆனால் படம் சொதப்பிவிடும். அப்படி வேறு மொழிகளில் சூப்பர் ஹிட்டாகி அதை நம்பி தமிழில் எடுத்து படு ப்ளாப் ஆன படங்களில் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஓ மணப்பெண்ணே

Advertising
Advertising

ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான ஓ மணப்பெண்ணே திரைப்படம் பெரிதாக ஓடவில்லை. இந்த படம் 2016ம் ஆண்டு தெலுங்கில் வெளியான பெல்லி சூப்புலு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக். ஆனால் தெலுங்கில் இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

ஒஸ்தி

சிம்பு, ரிச்சா கங்கோபாத்யாய், சந்தானம், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஒஸ்தி. இந்தியில் சூப்பர் ஹிட்டான தபாங் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் ஒஸ்தி. தமிழில் இந்த படம் அந்த அளவிற்கு ஓடவில்லை.

இதையும் படிங்க- ஜெயிலர் டிரெய்லர் விக்ரம் மாறியே இருக்கே!.. போட்டோ போட்டு கம்பேர் பண்ணி கலாய்க்கும் நெட்டிசன்கள்..

ஆதி

2006ம் ஆண்டு விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியான ஆதி திரைப்படம் தோல்வி அடைந்துவிட்டது. இந்த படம் தெலுங்கில் 2005ம் ஆண்டு வெளியான அத்தனோக்கடே என்ற படத்தின் ரீமேக். தெலுங்கில் இந்த படம் செம ஹிட்டானது.

சேட்டை

இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் டெல்லி பெல்லி. இந்த படத்தை தமிழில் இயக்குநர் கண்ணன் இயக்கியிருந்தார். ஆர்யா, ஹன்சிகா, பிரேம் ஜி, சந்தானம் ஆகியோர் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான சேட்டை திரைப்படம் தான் டெல்லி பெல்லி படத்தின் ரீமேக். இந்த படமும் அட்டர் பிளாப் ஆகிவிட்டது.

தில்லாலங்கடி

ஜெயம் ரவி, தமன்னா, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் தில்லாலங்கடி. தெலுக்கில் கிக் என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் தில்லாலங்கடி. இந்த படம் தமிழில் சரியாக ஓடவில்லை. 

இதையும் படிங்க- மீண்டும் மீண்டுமா!. ஆளை விடுங்கடா சாமி!.. வெற்றிமாறன் செஞ்ச வேலையில் கடுப்பான விஜய் சேதுபதி!..

Published by
prabhanjani