More
Categories: Cinema News latest news trailers

போர்த்தொழிலை அடுத்து மீண்டும் ஒரு சைக்கோ திரில்லர்!.. உறைய வைக்கும் ‘ஹிட்லிஸ்ட்’ டீசர் வீடியோ!…

தமிழ் சினிமாவில் கிரைம் திரில்லர் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். அதேபோல், சைக்கோ கில்லர்கள் தொடர்பான கதைகளும் மிகவும் அரிதாகத்தான் வெளியாகி வந்தது. ஆனால், சமீபகாலமாக இது போன்ற படங்கள் அதிகம் வர துவங்கியுள்ளது. அதற்கு காரணம் ராட்சசன் மற்றும் போர்த்தொழில் ஆகிய படங்களின் வெற்றிதான்.

குறைவான பட்ஜெட்டில் உருவாகி தயாரிப்பாளருக்கு அதிக லாபம் கொடுத்த படங்கள் இவை. எனவே, சில அறிமுக இயக்குனர்கள் கிரைம் மற்றும் சைக்கோ திரில்லர் கதைகளை எடுக்க துவங்கியுள்ளனர். போர்த்தொழில் படம் சூப்பர் ஹிட் அடித்து சரத்குமாருக்கு அதிக வாய்ப்புகளை பெற்று தந்துள்ளது.

Advertising
Advertising

இதையும் படிங்க: கடலிலேயே 7 போட்டு கலக்கிய கமல்!.. எத்தனை படம் இருந்தாலும்!.. பிக் பாஸ் சீசன் 7 தான் முக்கியமாம்!..

இந்நிலையில், அதே வரிசையில் ஒரு சைக்கோ திரில்லர் படமாக உருவாகியுள்ளது ஹிட்லிஸ்ட். இப்படத்தை சூர்யகதிர் காக்கலார் மற்றும் கார்த்திகேயன் என இரண்டு பேர் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தில் விஜய் கனிஷ்கா என்கிற புதுமுக ஹீரோ நடித்துள்ளார். மேலும், முனிஷ்காந்த், சமுத்திரக்கனி, கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

குறிப்பாக சரத்குமார் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். போர்த்தொழில் படத்திற்கு பின் ஒரு சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிடுகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், அசத்தலான பல காட்சிகள் இடம் பெற்றுள்ளது. டீசரை பார்க்கும்போது கண்டிப்பாக இப்படமும் சூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
சிவா

Recent Posts