Connect with us
vettaiyan

Cinema News

வேட்டையன் படத்துக்கு தலைப்பு வந்தது எப்படி தெரியுமா? பிரபலம் புதுத்தகவல்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் வேட்டையன். படத்திற்கான புரொமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. இதன் பர்ஸ்ட் சிங்கிள் மனசிலாயோ சாங் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போம்.

வேட்டையன் 148 நாள்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. ரஜினி, மஞ்சுவாரியர், பிரீத்திகாசிங், அமிதாப்பச்சன், ராணா டகுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர். த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். ரஜினிகாந்த் புதிதாக எந்த இயக்குனரையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியதே இல்லை. வெற்றி பெற்ற இயக்குனர்களை அழைத்துப் பாராட்டுவது தான் அவரது பணி. ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கன்னு சொல்வார்.

Also read: 300 கோடி கோட் வசூலா? அதெல்லாம் ஐஸ் வைக்கிற வேலை… ஷாக் கொடுத்த எஸ்.ஏ.சி !

கதை பிடித்து இருந்தால் அவரது படத்தில் நடிப்பார். வெற்றி பெற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்தால் நமக்கு பாதுகாப்பு இருக்கும். கதையிலும் திருத்த வேண்டிய அவசியம் இருக்காது. அந்த அடிப்படையில் ஜெய்பீம் என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர் த.செ.ஞானவேல். நடந்த சம்பவத்தை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் திரைக்கதையாக அமைத்து சொல்வதில் வல்லவர் த.செ.ஞானவேல். அந்த அடிப்படையில் அவரை இயக்குனராக போடும்படி லைகாவுக்கு அவர் தான் சிபாரிசு செய்தார். இந்தப் படத்தில் துஷாரா விஜயன் பாதிபடத்தில் இணைந்தார்.

இவர் பா.ரஞ்சித்தின் கண்டுபிடிப்பு. இந்தப் படத்தில் முக்கிய வில்லன் ராணா டகுபதி. இவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி வில்லன். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்படிப்பு பல மாநிலங்களில் நடந்துள்ளது. வெளிநாடுகளில் சூட்டிங் கிடையாது. தனது கதைக்குத் தான் த.செ.ஞானவேல் முக்கியத்துவம் கொடுப்பார்.

கொட்டுக்காளி, தங்கலான், வாழை படங்கள் சமீபத்தில் வந்தன. அத்தனையும் யதார்த்த கதை. கற்பனை கலந்தது. காதல் படங்கள், பான் இண்டியா படங்கள்னு ஒவ்வொரு சீசனாக வரும். சமீபத்திய சீசன் யதார்த்த கதை.

உண்மைச்சம்பவங்கள் அடிப்படையாகக் கொண்ட கதைகள். அந்த வகையில் வேட்டையன் வருகிறது. திருவிழா சீசனில் படம் வந்தால் வசூலை அள்ளும் என்பது நம்பிக்கை. அதனால் அக்டோபர் 10ல் வருகிறது. அக்டோபர் 12ல் ஆயுத பூஜை வருகிறது. அக்டோபர் 13ல் விஜயதசமி. அதனால் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகைக் காலத்தைக் கணக்கில் கொண்டு லைகா நிறுவனம் வேட்டையன் படத்தின் ரிலீஸை முடிவு பண்ணியுள்ளது.

இதனுடன் மோத இருந்த கங்குவா படமும் தள்ளிப் போய் உள்ளது. போலி என்கவுண்டர்களை எதிர்க்கும் படமாக வந்துள்ளது. அது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று அழகாக திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் த.செ.ஞானவேல்.

கல்வி வணிகமாக மாறியிருக்க காரணம் ஏன் என்பதையும் படத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். பாடத்தோடு சேர்த்து நல்ல படத்தையும் தந்திருக்கிறார். வேட்டையன் படம் பார்த்தவர்கள் அருமையாக வந்து இருக்கிறது… அருமையான என்டர்டெயின்மென்ட் என்று தான் சொல்கிறார்கள்.

manasilayo

manasilayo

தனியார் தொலைக்காட்சியில் வந்த வெற்றி பெற்ற தொடரில் கதாநாயகனின் பெயர் வேட்டையன். அந்த டி.வி.சீரியலில் வேட்டையனாக நடித்தவர் பெயர் கவின். இது மக்கள் மத்தியில் பிரபலமானதால் வேட்டையன் என்ற பெயர் வந்தது.

இப்படத்தில் பகத்பாசில் மிகச்சிறந்த காமெடி கேரக்டரில் அசத்தியிருக்கிறார். அமிதாப்பச்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் திருப்புமுனையாக அமையும் வகையில் கௌரவ வேடத்தில் வருகிறார். மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளவர் பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன்.

google news
Continue Reading

More in Cinema News

To Top