Connect with us
actress

Cinema History

நடிகைன்னாலே முதல்ல அதுதான்!. அப்புறம்தான் நடிப்பு!.. என்ன சொல்கிறார் பாருங்க இந்த பிரபலம்..!

பிரபல சினிமா விமர்சகரும், டாக்டருமான காந்தாராஜ் நடிகை அம்பிகா பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

கேமராவிற்கு அவரைப் போல அழகான முகமே கிடையாது என்ற அளவில் இருந்தார் அம்பிகா. அவருக்கு அதிர்ஷ்டம் இல்லாததால் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதே போல சாவித்திரி, பத்மினி, கே.ஆர்.விஜயாவை சொல்லலாம். அந்த வகையில் ஹீரோயின்ஸ் லுக் ரொம்ப ரொம்ப அவசியம்.

Dr.Kantharaj

போட்டோஜெனிக் ஃபேஸ் என்ற ஒரு வார்த்தை உண்டு. அவங்க கண்ணுக்கு அவ்ளோ அழகியா இருப்பாங்க. ஆனா கேமராவுக்கு அந்த ஃபேஸ் சரியாவே இருக்காது. குரூப் டான்ஸ் ஆடும்போது பாருங்க. அதுல அவ்ளோ அழகா இருப்பாங்க. அது கடைசி வரை குரூப் டான்ஸாவே போயிடும்.

அந்த மாதிரி குரூப் டான்ஸ்ல இருக்கும்போது ஹீரோயின் என்ன சொல்வாங்கன்னா அந்தப் பொண்ண ஆட வேண்டாம்னு சொல்வாங்க. அந்த பிரேம்ல அந்த பொண்ணுதான் நிக்கும். அதே மாதிரி செலக்ட் பண்ணுவாங்க.

எல்லாத்தையும் தாண்டி பார்த்த உடனே அந்தப் பொண்ண பார்க்கணும்கற எண்ணம் வரணும். குஷ்பூ அழகா சொல்வாங்க. படத்துல நான் வரும்போது பார்க்கணும்னு தோணும். இந்தப் பொண்ணு இனனொரு சீனு நிக்கலாமேன்னு அவங்களுக்கு தோணணும். அப்படி நினைச்சா தான் நான் சினிமாவுல நிக்க முடியும்.

இதையும் படிங்க: நாட்டாமை படத்துல பொன்னம்பலம் வாங்கி சம்பளம் இவ்வளவுதானா!.. என்னமோ நினைச்சா!.. அடப்பாவமே!..

நடிப்புங்கறது பெண்களுக்கு அப்புறம் தான். முதல்ல தோற்றம். வந்து நின்ன உடனே என்னா அழகுன்னு சொல்லணும். அதுக்கப்புறம் தான் நடிக்கிறாளா இல்லையாங்கறது. நடிப்புங்கறது செகண்டரி தான்.

இந்த சினிமா உலகத்தைப் பொறுத்த வரையிலும் எந்த மொழிப்படமானாலும் இதுதான். நானும் ஒரு பெண் ணுன்னு படம் பார்த்திருப்பீங்க. விஜயகுமாரி நடிச்சது. அது அந்தக் காலத்துல பெரிசா ஓடுச்சு. கருப்பா இருப்பா அந்தக் கதாநாயகி. அதனால யாரும் விரும்ப மாட்டாங்க. ஒரு ஜமீன்தார் வீட்டுக்குப் போவா.

கருப்பு நிறம் கறதால நிறைய அவமானம் வரும். அங்க கிருஷ்ணரோட சிலை இருக்கும். கண்ணா கருமை நிற கண்ணா… உன்னைக் காணாத கண் இல்லையே… என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லையே. அப்படியே கருப்பா இருந்தாலும் உன்னை பொறுப்பாங்க. என்னைப் பொறுக்க மாட்டாங்க.

அதே படத்தை இந்தில எடுத்தாங்க. அதுல மீனாகுமாரி நடிச்சாங்க. அதுல விமர்சனம் என்ன எழுதுனாங்கன்னா… கருப்புங்கறத தவிர அந்த ஹீரோயினுககு ஒண்ணும் கிடையாது. கருப்பா இருக்குறதுக்கு இன்னும் கொஞ்சம் கருப்பா பொண்ணப் போட்டு எடுத்து இருந்தா படம் இன்னும் நல்லா இருந்துருக்கும். கருப்பா இருந்தா கூட நல்லா இருக்கணும். லட்சணமா. அப்படி ரிஸ்க எடுக்க யாரும் விரும்பல.

இதையும் படிங்க: கேவலம்!.. வெளிநாட்டில் அத்துமீறிய ’அ’ எழுத்து நடிகர்!.. பொண்டாட்டியை பறி கொடுத்து விட்டு கதறும் கணவர்?..

கதாநாயகிங்கறவ வந்து சராசரியா நாம பார்க்குறத விட ஒரு பங்கு அதிக அழகா இருக்கணும். கூட்டத்துல அந்தப் பொண்ணு வர்றானனாக்கா தனியா தெரியணும். அதுதான் மெயின்.

நடிகையே வந்து ஒரு பேக்கிங் மெட்டீரியல் தான். சாக்லெட் மாதிரி. அந்தச் சாக்லெட்டுக்கு பேக்கிங் மெட்டீரியல் அழகா இல்லேன்னா யாருமே வாங்க மாட்டாங்க. அது தான் அந்த சாக்லெட்டுக்கு அழகு.

அவங்களுக்கான ரோல கொடுத்து நீங்க எடுக்கலாம். இருந்தாலும் கண்ணுக்கு அழகா இருக்கணும். அதையும் தாண்டி வந்தவங்க சில பேரு இருக்கணும்.

google news
Continue Reading

More in Cinema History

To Top