Connect with us
kamal

Cinema News

கமலுக்கு நடந்த இழப்பு! அதை சரிகட்டிய ரஜினி.. இவர்கள் நட்புக்கு ஆரம்ப விதை போட்டது இந்த சம்பவம்தானா?

Rajini Kamal: இன்று தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி இவர்களுக்குப் பிறகு திரையுலகை கட்டி ஆண்டு வருபவர்கள் நடிகர் ரஜினி மற்றும் கமல். சினிமாவில் ரஜினிக்கு சீனியர் கமலாக இருந்தாலும் இருவருமே 80 கள் காலகட்டத்தில் இருந்து இன்றுவரை நட்பிற்கு அடையாளமாக திகழ்ந்து வருகிறார்கள். அதை பல மேடைகளில் அவர்களே சொல்லி பெருமைப்பட்டதும் உண்டு.

அது மட்டுமல்லாமல் ஒரு பெரிய நடிகர்களாக இருந்து கொண்டு எனக்கு அவர் உதவி செய்தார் இவர் உதவி செய்தார் என சொல்வது மிக அரிது. ஆனால் இவர்கள் இருவருமே படப்பிடிப்பில் ரஜினி எனக்கு உதவி செய்தார் கமல் எனக்கு உதவி செய்தார் என மாறி மாறி அவர்களை பற்றி மிகப் பெருமையாக அதுவும் உண்மையைப் பேசி இன்று வரை அடுத்த இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: சல்மான் கானுக்கு சங்கு ஊத காத்திருக்கும் ஏ.ஆர். முருகதாஸ்?.. அப்போ குட் பேட் அக்லியும் ஃபிளாப்பா?..

ரஜினி இந்த சினிமாவிற்குள் வருவதற்கு முன்பே கமல் நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வந்தவர்.  அந்த நேரத்தில் தான் ரஜினி சினிமாவிற்குள் வருகிறார். அவரை அடையாளம் காட்டியது கே பாலச்சந்தர். அபூர்வராகங்கள் படத்தில் முதன் முதலில் ரஜினியை நடிக்க வைக்கிறார் பாலச்சந்தர். அந்தப் படத்தில் கமலுக்கு முதன்மையான கதாபாத்திரம். ரஜினி ஒரு சின்ன கேமியோ ரோலில் வருவார்.

இதன் பிறகு தான் இவர்களுடைய நட்பு ஆரம்பமாகிறது. ஆனால் முதல் படத்திலேயே ரஜினி மீது எனக்கு அதிக அளவு ஈர்ப்பு வந்து விட்டதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் கமல். அதிலிருந்து தொடர்ந்த நட்புதான் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்றும் கூறினார். ரஜினி மேல் அந்த அளவுக்கு ஈர்ப்பு வந்ததற்கான ஒரு காரணத்தையும் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் கமல்.

இதையும் படிங்க: திரை உலகைக் கலக்கப் போகும் இன்றைய படங்கள்… ஜெயிக்கப் போவது யாரு?

அதாவது அந்த படத்திற்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை கூறினார் கமல். அதாவது கமலுக்கு கோவிந்தராஜன் என்ற ஒரு நெருங்கிய நண்பர் இருந்தாராம். நண்பரையும் தாண்டி ஒரு சகோதரர்கள் போலவே இருவரும் பழகி வந்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தன் வீட்டில் உள்ள ஒரு நபர் என்பதைப் போல இருவருக்கும் ஆன நெருக்கம் அந்த அளவுக்கு இருந்ததாம். திடீரென ஒரு நாள் அவருக்கு கேன்சர் வந்து அதனால் இறந்து போனாராம்.

நண்பரின் அந்த மறைவு கமலுக்கு மிகவும் அதிர்ச்சியை தந்திருக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து அவரால் சில காலம் மீளவே முடியவில்லை. அந்த நேரத்தில் தான் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது ஆரம்பத்தில் ரஜினியை சந்தித்து இருக்கிறார். இருவரும் ஹாய் ஹலோ என்று தான் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க:இவ்ளோ சம்பாதிச்சும் செந்தில் அதுல வீக்கா? மனைவி சொன்ன சீக்ரெட்.. அட கடவுளே

ஒரு நாள் ரஜினியின் காட்சி படமாக்கப்பட்டபோது அங்கிருந்த நண்பர் ஒருவர் கமலை படப்பிடிப்பிற்கு வருமாறு சொல்லி இருக்கிறார். கமலும் அந்த செட்டுக்கு போக ரஜினியை பார்த்ததும் கமலுக்குபேரதிர்ச்சியாம். ஏனெனில் ரஜினியின் அந்த கெட்டப் அப்படியே கமலின் நண்பர் கோவிந்தராஜன் மாதிரியே இருந்ததாம். தாடி ஹேர்ஸ்டைல் எல்லாமே அச்சு அசல் இவருடைய நண்பர் தோற்றத்திலேயே ரஜினி இருந்திருக்கிறார்.. அதுமட்டுமல்லாமல் இந்தப் படத்தில் ரஜினியின் கதாபாத்திரமும் கடைசியில் ஒரு ரத்த புற்று நோயால் இறந்து போவது மாதிரி தான் இருக்கும்.

அதுவும் மேலும் கமலை ஒருவித தாக்கத்திற்கு கொண்டு சென்று இருக்கிறது. அதிலிருந்து தன் நண்பர் மீது வைத்திருந்த எமோஷன் அன்பு எல்லாவற்றையும் ரஜினி மீது வைத்து விட்டேன் என அந்த பேட்டியில் கூறினார். அந்த ஒரு பாசம் நட்பு எங்களுக்குள் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது .இதை நான் ரஜினியிடமும் பலமுறை சொல்லி இருக்கிறேன் என கமல் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top