கோட் படத்துல விஜய் கேரக்டர் எப்படி? அஜ்மல் நடிக்க சம்மதித்தே இதுக்குத்தானாம்...
வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி விஜயின் 68வது படம் கோட். தந்தை மகன் என இரு வேடங்களில் விஜய் கலக்குகிறார். டீஏஜிங்கில் அவரது இளவயது தோற்றம் அசத்தலாக உள்ளது. டிரெய்லர் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து இழுத்துவிட்டது.
டிக்கெட் முன்பதிவு ஆரம்பித்த 2 மணி நேரத்திற்குள் ஞாயிறு வரை ஹவுஸ்புல் ஆகி விட்டது. நாளை மறுநாள் (செப்.5) ரிலீஸ் ஆவதால் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோட் படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். இவர்களில் அஜ்மல் படத்தில் விஜயுடன் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். என்ன சொல்றாருன்னு பார்ப்போமா...
Also read: பஞ்சாயத்தே இல்லாம வந்துருக்கேன்னு பார்த்தா கோட் படத்துக்கு இவ்வளவு தலைவலியா?
நிறைய இன்ட்ரஸ்டான விஷயங்கள் கோட்ல இருக்கு. இப்படி ஒரு விஷயம் இருந்துச்சா என்ன அப்படிங்கற மாதிரி படத்துல ஒரு சீன் வரும். இதுவரை பார்க்காத ஒரு விஜய் சாரைப் பார்ப்பீங்க. 3 விஜய்ல குட்டி விஜய் சூப்பரா இருப்பாரு.
விசில் போடு சாங் முதல்ல கேட்கும்போது ஒரு மாதிரியா இருந்தது. அப்புறம் ரொம்ப சூப்பரா இருந்துச்சு. அப்புறம் கடைசியா வந்த மட்ட சாங்கும் செம. விஜய் சாரு படத்துல என்னென்ன எல்லாம் தேவையோ அதெல்லாம் இந்தப் படத்துல இருக்கு.
சில டைம்ல விஜயை சார்னு கூப்பிடுவேன். சில டைம்ல அண்ணான்னு கூப்பிடுவேன். எனக்கு வந்து இந்தப் படம் ரொம்பவே வித்தியாசமான அனுபவம். எங்கு பார்த்தாலும் ஒரே ஆர்டிஸ்ட். கும்பல். எப்பவுமே சிரிச்சிக்கிட்டு இருப்போம். அவங்களுக்கு ஒரு வைப் இருக்கும். வெங்கட்பிரபு சார் கேங் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அது ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். ஏற்கனவே அவர்கிட்ட நான் ஒரு படம் பண்ணனும்னு சொல்லி வச்சிருந்தேன். திடீர்னு அவர் கூப்பிட்டாரு. விஜய் சார் படம்னதும் மறுக்க முடியல.
Also read: கோட் ரிலீஸ்!.. ரசிகர்களுக்கு விஜய் சொன்ன அறிவுரை! கரெக்ட்தான்.. ஆனா கேட்கணுமே!..
பிரபுதேவா மாஸ்டர், ஏஜிஎஸ் புரொடக்ஷன் எனக்கு எக்சைட்டிங்கா இருந்தது. ஏஜிஎஸ்சோட ஒரு படம் மிஸ் பண்ணிட்டேன். அது தனி ஒருவன். அரவிந்தசாமி பண்ற கேரக்டருக்குக் கூப்பிட்டாங்க. அப்போ நான் தெலுங்குல பிசியா இருந்தேன். சரி. இந்தவாட்டியும் மிஸ் பண்ணிடக்கூடாதுன்னு தான் நடிக்க ஒத்துக்கிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.