Connect with us

Cinema History

தப்பான விஷயத்தை சொல்லவேக் கூடாது…கார்த்திக்கு அட்வைஸ் செய்த ராஜ்கிரண்

இன்று திரையில் வந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்த விருமன் படம் பல்வேறு வகையான கலவையான விமர்சனங்களைத் தந்து கொண்டு இருக்கிறது. படத்தின் கதை பழசு தான் என்றும் கார்த்தி, அதிதி நடிப்பு சூப்பர் என்றும் சொல்கிறார்கள். வழக்கமான விறுவிறுப்பு இந்தப்படத்தில் இல்லை என்றும் சொல்கிறார்கள். அதே போல் கிராமத்துப் பின்னணியில் வந்துள்ள இந்தப்படமும் கார்த்திக்கு ஒர்க் அவுட்டாகி உள்ளது என்றும் சொல்கிறார்கள்.

காதல், சென்டிமென்ட், எமோஷன், காமெடி, பாடல் என பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ள இந்தப் படத்தின் ஹீரோவுக்கு இது புதுசு அல்ல. முத்தையாவுடன் கொம்பனுக்குப் பிறகு 2வது முறையாக கைகோர்க்கிறார். முதல் படமே பருத்திவீரன் தான். செம கிராமத்துப் படம். பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. அடுத்த கிராமத்துப் படம் கடைக்குட்டி சிங்கம். இதுவும் மாஸானது. அடுத்து கொம்பன். மெகா ஹிட் ஆனது. இப்போது விருமன். விருமன் பட அனுபவங்கள் குறித்து கார்த்தி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா…

karthi

ஊருக்குப் போகும்போது நீங்க கிராமத்துப் படமா எடுங்கன்னு சொல்வாங்க. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டணும்கறதுக்காக மெனக்கெடுவேன். கடைக்குட்டி சிங்கம் பாணியிலும் வந்து விடக்கூடாது. அதே நேரம் பருத்தி வீரன், கொம்பன் மாதிரியும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக மெனக்கெட்டு இந்தப்படத்தில் வித்தியாசமாக நடித்து இருக்கிறேன். கிராமத்துல தான் இயற்கையும் மக்களையும் பார்க்க முடியுது.

அங்க தான் வாழ்க்கை இருக்கு. இல்லேன்னா நம்மளையே நினைச்சிக்கிட்டு இருக்கணும். இல்லேன்னா எவனயாவது பார்த்து பொறாமைப்பட்டுக்கிட்டே இருக்கணும். அப்படியே போயிரும். கிராம வாழ்க்கை தான் ரொம்ப அழகா இருக்கு. அப்படி வந்து ஊருக்குப் போறது. அந்தக் கதாபாத்திரமா நடிக்கிறது வந்து ரொம்ப சுகமா இருக்கும். முத்தையாவோட கேரக்டர எல்லாம் பார்த்தா அவ்ளோ அழகா இருக்கும்.

கொம்பன் படத்துல ராஜ்கிரண் அய்யாக்கூட நடிக்கும்போது பார்த்தீங்கன்னா அன்னைக்குலாம் ஒரு பையன் என்கிட்ட சொன்னான். அண்ணே மாமனார்கிட்டல்லாம் அவ்ளவா பேச மாட்டேன்னேன். கொம்பனுக்கு அப்புறம் தான் கொஞ்சம் மரியாதை கொடுக்கிறேன்னு சொன்னான். ஏன்னா பசங்களுக்கு வந்து மாமனார எப்படி ட்ரீட் பண்ணனும்னே தெரியாது.

எங்க மாமனார் வந்து ஆசையா இப்படி தோள்ல தொட்டுட்டுப் போயிடுவாரு. என்னை ரொம்ப பிடிக்கும். நாங்க ரெண்டு பேரும் ஆசையா பேசுனதே கிடையாது. ஆனா அவங்கக்கிட்ட போய் உட்கார்ந்தேன்னா அவங்களுக்குத் தெரிஞ்ச விஷயம் யாருக்குமே தெரியாதுங்கற அளவுக்கு இருக்கும். ரீசன்டா வந்து அமெரிக்கன் பிரசிடன்ட் வந்து இஸ்ரேல் பிரசிடன்ட்டுக்கிட்ட என்ன பேசுனாருன்னு கேட்டா சொல்வாரு. இதெல்லாம் எங்க படிச்சீங்கன்னு கேட்டா டீக்கடை தான்னு சொல்வாரு. வேற எதுவும் கிடையாது.

Viruman

அப்படின்னா வாழ்க்கை முழுவதும் டீக்கடைல இருந்த முத்தையா எவ்ளோ கதை வச்சிருப்பாருன்னு யோசிச்சிப் பாருங்க. அப்படி வந்து உறவப் பத்தி சொல்றது அவ்ளோ அழகா இருக்கும். ராஜ்கிரண் அய்யாவப் பத்தி சொல்லணும்னா தியேட்டர்ல வெறும் கலெக்ஷன் எவ்ளோன்னு செக் பண்றவரு தியேட்டர்ல. அங்க ஆரம்பிச்சி அப்புறம் ஒரு டிஸ்ட்ரிபியூட்டராகி அப்புறமா ஒரு புரொடியூசராகி அப்புறம் வேற வழியில்லாம ஹீரோவாகி டைரக்டும் பண்ணி அவ்ளோ விஷயங்கள் சார் பண்ணிருக்காங்க.

viruman Rajkiran

அவ்ளோ விஷயங்கள் சொல்லிக் கொடுத்துருக்காங்க. லைப்ல வந்து வெற்றி வரும்போது தடுமாறிடக் கூடாது. நிதானமா இருக்கணும். ஸ்க்ரீன்ல எப்பவும் தப்பான விஷயத்தை சொல்லவேக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. கொம்பன்ல வந்து சரக்கடிக்கிற சீன் வரும். அப்பா என்னப் போயி குடிக்க சொல்றீயப்பா…அவரு எம்ஜிஆரோட பெரிய பேனு. அதனால சினிமாவுல எல்லாம் அப்படி பண்ணக்கூடாதுன்னு சொல்வாரு. சினிமா வந்து பெரிய தாக்கம் மக்கள் மேலன்னு.

அப்புறம் அதுக்கு ஒரு வசனம் வேறப் போட்டுட்டாரு. மனசு வலிக்கி குடிக்கணும்னா நம்ம ஊர்ல எல்லா பொம்பளங்களும்தான்யா குடிக்கணும். உடல் வலிக்கி குடிக்கிறேன். வேற வழியில்லாமன்னு சொல்லி அதையும் வந்து வேற மாதிரி கலரை மாத்தி விட்டுருவாரு. ராஜ்கிரண் சார் இந்தப்படத்தில முதல்ல வந்து நான் பண்றேன் தம்பி…ன்னாரு. முதல்ல போன் அடிச்சிட்டாரு. அவரு வந்து கதையே கேட்கல. நான் பண்றேன் தம்பின்னுட்டாரு. அவரு பிக்ஸ் பண்ணிட்டாரு. அப்போ வந்து ஏதோ நம்பிக்கை வந்துடுச்சு.

google news
Continue Reading

More in Cinema History

To Top