More
Categories: Cinema News latest news

வருஷ கணக்கா படம் எடுக்குறவங்க லோகேஷ்கிட்ட கத்துக்கணும்!.. 5 படங்களை எத்தனை நாளில் முடித்தார் தெரியுமா?…

Lokesh kanakgaraj: சினிமா துவங்கி பல வருடங்களாகவே அதிகபட்சம் 2 மாதங்கள் முதல் 3 மாதங்களில் ஒரு திரைப்படத்தை எடுத்து முடித்துவிடுவார்கள். ஏனெனில், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், படத்தின் பட்ஜெட், படப்பிடிப்பு நடக்கும் இடங்கள் என எல்லாவற்றையும் சரியாக முன்பே திட்டமிட்டார்கள்.

பாராசக்தி படத்திற்கு பின் சிவாஜி நடித்த அந்த நாள் படம் கூட 16 நாட்களில் எடுக்கப்பட்டதுதான். 80,90களில் 25 நாட்களில் சூப்பர் ஹிட் படத்தை எடுத்த பல இயக்குனர்கள் இருந்தார்கள். ரஜினி, கமல் படங்கள் 2 மாதங்களில் எடுத்து முடிப்பார்கள். அதனால்தான் 80களில் ரஜினி, மோகன், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் வருடத்திற்கு 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்கள்.

Advertising
Advertising

இதையும் படிங்க: லோகேஷ் பாக்ஸிங் கத்துகிட்டதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா?… பலே ஆளுதான் போலயே

ஆனால், ஷங்கர் போன்ற சில இயக்குனர்கள் அதிக பட்ஜெட்டில், அதிக நாட்கள் படத்தை எடுத்து அதை மாற்றிவிட்டனர் ஒரு வருடத்திற்கு மேல் படமெடுத்தால் அவர் பெரிய இயக்குனர் என்கிற இமேஜை உருவாக்கிவிட்டனர். அவர் இயக்கிய பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு ஒரு வருடத்திற்கும் மேல் நடக்கும். இந்தியன் 2 படத்தை கூட பல வருடங்களாக எடுத்து வருகிறார்.. இன்னும் அது முடிந்தபாடில்லை. அவரை பின்பற்றி அவரின் சிஷ்யர் அட்லியும் அதுபோலவே படமெடுத்து வருகிறார். இதில், சரியான திட்டமிடல் இல்லாமல் படமெடுக்கும் கவுதம் மேனனையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இதில், வெற்றிமாறனும் முக்கியமானவர். பொல்லாதவன் வெளியாகி 16 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், அதன்பின் 5 படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார். விடுதலை படத்தை மட்டும் 2 வருடங்களுக்கும் மேல் எடுத்தார். விடுதலை 2 படத்தை பல மாதங்களாக எடுத்து வருகிறார். இதனால் பட்ஜெட் எகிறி தயாரிப்பாளரின் வயிற்றில் புளியை கரைக்கும்.

இதையும் படிங்க: ‘லியோ’ படத்தில் முதல் 10 நிமிடம்! கடைசி 7 நிமிடம் – யார் வராங்க தெரியுமா? ஹைப்பை ஏற்படுத்தும் லோகிபாய்

இப்போது இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது. இவர் மாநகரம் படத்தை 45 நாட்களிலும், கைதி படத்தை 62 இரவுகளிலும், மாஸ்டர் படத்தை 129 நாட்களிலும், விக்ரம் படத்தை 110 நாட்களிலும், இப்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ படத்தை 125 நாட்களிலும் எடுத்து முடித்துள்ளார்.

அதனால்தான், அவரின் இயக்கத்தில் நடிக்க பெரிய நடிகர்களும், அவரை வைத்து படம் பெரிய தயாரிப்பாளர்களும் ஆசைப்படுவகிறார்கள் போல!..

இதையும் படிங்க: எஸ்.ஏ.சி சொன்னாருனுதான் போனேன்! ‘பாட்ஷா’ பட இயக்குனருக்கே தண்ணி காட்டிய விஜய்!

Published by
சிவா

Recent Posts