Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வந்து இன்று கோலிவுட்டில் மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார். ஆனால் அவருக்கு அது எதேர்ச்சையாக நடக்கவில்லை. நடத்தி வைக்கப்பட்டது என்ற அதிர்ச்சி தகவலை பிரபல திரை விமர்சகர் பிஸ்மி தெரிவித்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
பின்னர் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் தொகுத்து வழங்கினார். அப்போதே அவரின் ஆன்ஸ்பாட் காமெடிகளால் ரசிகர்களை மனதை கவர்ந்தார். தொடர்ந்து 3 திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டுக்குள் எண்ட்ரியானார். மெரினா, மனம் கொத்தி பறவை என அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் சுமாரான வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து தனுஷின் தயாரிப்பில் எதிர்நீச்சல் திரைப்படத்தில் நடித்தார்.
இதையும் படிங்க: கே.எஸ்.ரவிக்குமாருக்கு குடை பிடித்த ரஜினி!.. சூப்பர்ஸ்டார் அதை பண்ணதுக்கு காரணம் இருக்கு!..
படம் மாஸ் ஹிட் கொடுக்க தன்னுடைய ஹீரோ அந்தஸ்த்தை தக்க வைத்து கொண்டார். தொடர்ச்சியாக அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ஹிட் கொடுக்க முன்னணி நடிகராக கோலிவுட்டில் இடம் பிடித்தார். ஆனால் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான அயலான் கூட சுமாரான வசூலையே பெற்றது.
இது ஒருப்புறம் இருக்க சிவகார்த்திகேயனின் வளர்ச்சி சாதாரணமாக நடந்தது இல்லை. அது நடத்தப்பட்டது என திரை விமர்சகர் பிஸ்மி தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், சிவகார்த்திகேயன் ஆர்.டி.ராஜா என்பவரின் நட்பு கிடைக்கவில்லை என்றால் இந்த இடத்துக்கு வந்திருக்கவே மாட்டார். அவரின் ஆரம்பகாலம் தொடங்கி இன்று வரை அவர் குறித்து எந்த ஒரு நெகட்டிவ் விஷயங்களையும் வெளியில் விடாமல் ராஜா தான் பார்த்து கொண்டார்.
இதையும் படிங்க: 8 நாள் கால்ஷீட் கொடுத்தேன்… ஆனா 100 நாளை தாண்டி போயிட்டே இருக்கு… வெற்றிமாறனால் புலம்பும் முன்னணி நடிகர்…
அவர் எப்போதுமே சிவகார்த்திகேயனுக்கு தேவையான படங்களை தேர்வு செய்து அதனை சரியாக புரோமோட் செய்வதில் கில்லாடியாக இருந்தார். ஒருகட்டத்தில் சிவாவுக்கு ஒரு பிரச்னை வந்த போது சசிகலா உறவினரிடம் உதவிக்காக போய் நின்றார். அதுகுறித்து நான் செய்தி வெளியிட தயாராக இருந்தேன். அப்போ ஆர்.டி.ராஜா என்னிடம் வெகு நேரமாக பேசி அதை வெளியில் விட்டால் சிவகார்த்திகேயனின் இமேஜ் குறையும் எனக் கேட்டுக்கொண்டார்.
உண்மை என்றால் கண்டிப்பாக வெளியிடுவேன். இல்லை எனச் சொல்லுங்கள் உடனே இதுக்கு மன்னிப்பு கேட்கிறேன் எனக் கேட்டேன். அதுக்கு ராஜா உண்மை தான். ஆனால் வேண்டாமே எனக் கேட்டுக்கொண்டார். அப்படி அவர் செய்த வேலைகளால் தான் சிவகார்த்திகேயன் இன்று உச்சநட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கிறார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…