பீஸ்ட் விஜயின் புகைப்படம் லீக்கானது எப்படி.?! துப்பறிந்த படக்குழுவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

பீஸ்ட் திரைப்படம் ஆரம்பித்த பொழுதிலிருந்தே ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி கொண்டு தான் இருக்கின்றன. இது ஷூட்டிங் ஆரம்பித்த நாள் முதல் தொடர்கதையாக தொடர்ந்து தான் வருகிறது. ஆரம்பத்தில் வெளிநாட்டில் ஷூட்டிங் இருந்த போது விஜய் திரும்பி நிற்கும் போட்டோ லீக் ஆனாது.
அதன் பிறகு,விஜய் ஷாப்பிங் மாலில் இருந்து வெள்ளை சட்டை, ரத்த கறையுடன் வெளியே வரும் புகைப்படம் லீக் ஆனது. அதுவே ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்த வேளையில், தற்போது, டப்பிங் தியேட்டரில் வைத்து ஒரு புகைப்படம் லீக் ஆகியுள்ளது.
இதையும் படியுங்களேன் - ரசிகர்களிடம் பாரபட்சம் பார்க்கிறாரா சூர்யா.?! அப்போ மத்தவங்க எல்லாம் பாவம் இல்லையா.?!
அதில், விஜய் வெளிநாட்டில், குதிரைகளுக்கு நடுவில் நின்று போன் பேசுவது போன்ற போட்டோ வெளியாகியுள்ளது. அந்த போட்டோ இணையத்தில் லீக் ஆனதும் , விஜய் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை யாரும் ஷேர் செய்யவேண்டாம் என மற்ற ரசிகர்களை கேட்டதற்கினங்க அது அதிகமாக பரவவில்லை.
இந்த லீக் எப்படி ஆனது விசாரிக்கையில், விஜய் எப்போதும் வழக்கமாக தான் பேசும் டப்பிங் தியேட்டரில் தான் டப்பிங் பேசுவாராம். அங்கு பயங்கர கெடுபிடி, அங்கு லீக் ஆக வாய்ப்பில்லை. ஆனால், மற்ற நடிகர்கள் இயக்குனர் நெல்சனிற்கு தெரிந்த இடத்தில் டப்பிங் பேசுவார்களாம். அந்த டப்பிங் தியேட்டரில் இருந்து தான் போட்டோ லீக் ஆகியுள்ளது என தகவல் கசிந்து வருகிறது. ஆனால், அது எந்த நடிகர் / டெக்னீசியன் மூலமாக வெளியானது என தீவிரமாக படக்குழு விசாரித்து வருகிறதாம்.