சிவாஜியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த விஜயகுமார்! அதனால் அவருக்கு கிடைத்த பெயர் என்ன தெரியுமா?

Published on: December 26, 2023
vijaya
---Advertisement---

Actor Vijayakumar: தமிழ் சினிமாவில் நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த குணச்சித்திர  நடிகர் என்ற பெயருக்கு முழு சொந்தக்காரராக திகழ்பவர் நடிகர் விஜயகுமார். சினிமாவில் நடிக்க போகிறேன் என்று தன் பெற்றோரிடம் சொல்லிவிட்டு நாடக கம்பெனியில் சேர்ந்தார் விஜயகுமார்.

கதாசிரியர் பாலமுருகன் நாடகக் குழுவில் சேர்ந்த அவருக்கு கந்தன் கருணை திரைப்படத்தில் சிவக்குமார் நடித்த முருகன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் வாய்ப்பு வந்தது இவருக்குத்தான், ஆனால் எதோ ஒரு காரணத்தால் அது சிவக்குமாருக்கு மாறியது,

இதையும் படிங்க: சரக்கு அடிச்சுட்டுத்தான் ஸ்டோரியே எழுதுவேன்! அதான் படம் அப்படி இருக்கு – காரித் துப்பிய ரசிகர்கள்

இருந்தாலும் விடாது முயற்சி செய்தார். பழம்பெரும் இயக்குனரான மாதவன் ஒரு புதிய நாடகத்தை தொடங்க இருக்கிறார் என்றும் அதில் இரண்டாவது நாயகனுக்கு ஆட்களை தேடிக் கொண்டு வருவதாகவும் கூறி பாலமுருகன் விஜயகுமாரிடம் சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகு பாலமுருகன் விஜயகுமார் ஆகிய இருவரும் மாதவனிடம் போனார்களாம். விஜயகுமாரை பார்த்ததும் மேக்கப் டெஸ்ட் எடுத்துவிடலாம் என்று கூறி ‘ராமன் எத்தனை ராமடி’ படத்தில் சிவாஜி போட்டிருந்த அந்த கதாபாத்திரத்தின் ஆடைகளை கொடுத்து போடச் சொல்லியிருக்கிறார்,

இதையும் படிங்க: அஜித் நோ சொன்னா நோ தான்! மகிழ்திருமேனியை விரட்டும் தல – இது என்ன கொடுமை

விஜயகுமாரும் சிவாஜி அணிந்திருந்த ஆடைகளை போட்டு வர வசனமும் சொல்ல சொல்லியிருக்கிறார் மாதவன். அச்சுபிரழாமல் விஜயகுமாரும் அந்த வசனங்களை சொல்ல அந்த புதிய படத்திற்கு தேர்வாகியிருக்கிறார் விஜயகுமார்.

அந்த படம்தான் ‘பொன்னுக்கு தங்க மனசு’. அதில் முதல் ஹீரோ சிவக்குமார். அந்த நேரத்தில் தன் உண்மையான பெயரை தவிர்த்து விஜயகுமார் தன் பெயரை சினிமாவிற்காக சிவக்குமார் என மாற்றியிருந்தாராம். ஏற்கனவே பொன்னுக்கு தங்க மனசு படத்தில் சிவக்குமார் இருந்ததால் என்ன பெயர் வைக்கலாம் என யோசித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க:  விஜயகாந்துடன் 25 முறை மோதிய ராமராஜன் படங்கள்… ஜெயித்தது யார் தெரியுமா?

எந்த கதாபாத்திரத்தின் காஸ்டியூமில் வந்து நடித்து வாய்ப்பைப் பெற்றாரோ அந்தப் படத்தில் சிவாஜியின் கதாபாத்திரத்தின் பெயர் விஜயகுமார் தானாம். அதனால் அந்த பெயரையே இவருக்கும் வைத்து அதிலிருந்து விஜயகுமார் என்று ஆனதாக சொல்லப்படுகிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.