Connect with us
VK RR

Cinema History

விஜயகாந்துடன் 25 முறை மோதிய ராமராஜன் படங்கள்… ஜெயித்தது யார் தெரியுமா?

80 மற்றும் 90களில் ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்தவர் விஜயகாந்த். ராமராஜனும் அப்படித்தான். அந்த வகையில் இவர்கள் படங்கள் என்றாலே ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு தியேட்டருக்குச் செல்வர். கிராமப்புறங்களில் இவர்களது படங்களுக்குத் தான் மவுசு. ஆனால் இவர்களது படங்களை ஒன்றுடன் ஒன்று நேரடியாக மோதினால் எப்படி இருக்கும் என்று பார்க்கலாமா…

நமம ஊரு நல்ல ஊரு – தர்மதேவதை

1986 தீபாவளிக்கு ராமராஜனுக்கு நமம ஊரு நல்ல ஊரு படம் வெளியானது. அதே நாளில் விஜயகாந்துக்கு தர்மதேவதை, தழுவாத கைகள் என்ற இரு படங்களும் வெளியானது. இவற்றில் 3 படங்களும் வெற்றி தான்.

எங்க ஊரு பாட்டுக்காரன் – வீரபாண்டியன்

EVP-VP

EVP-VP

1987ல் தமிழ்ப்புத்தாண்டு அன்று ராமராஜனுக்கு எங்க ஊரு பாட்டுக்காரன் படமும், விஜயகாந்துக்கு வீரபாண்டியன் படமும் வெளியானது. இருபடங்களுமே வெற்றி அடைந்தாலும் ராமராஜனுக்குத் தான் ஒரு படி அதிகம் வெற்றி.

1987 ஜூலையில் விஜயகாந்துக்கு நினைவே ஒரு சங்கீதம் படமும், ராமராஜனுக்கு ஒன்று எங்கள் ஜாதியே, இவர்கள் இந்தியர்கள் என்ற இரு படங்களும் வெளியானது. இவற்றில் இவர்கள் இந்தியர்கள் பிளாப். விஜயகாந்த் படம் மாபெரும் வெற்றி. ஒன்று எங்கள் ஜாதியே சுமார் ரகம்.

செண்பகமே செண்பகமே – காலையும் நீயே, மாலையும் நீயே

1988 பொங்கல் அன்று ராமராஜனுக்கு செண்பகமே செண்பகமே படமும், விஜயகாந்துக்கு காலையும் நீயே, மாலையும் நீயே, மக்கள் ஆணையிட்டால் படங்களும் வெளியானது. ராமராஜன் படம் தான் சூப்பர் ஹிட். காலையும் நீயே மாலையும் நீயே படமும் வெற்றி தான். மக்கள் ஆணையிட்டால் பிளாப்.

1988 மார்ச்சில் ராமராஜனுக்கு ராசாவே உன்னை நம்பி படமும், விஜயகாந்துக்கு தெற்கத்திக்கள்ளன், உள்ளத்தில் நல்ல உள்ளம் என இரு படங்களும் ரிலீஸானது. ராமராஜன் படம் சூப்பர்ஹிட். உள்ளத்தில் நல்ல உள்ளம், தெற்கத்திக்கள்ளன் படமும் சூப்பர்ஹிட். தெற்கத்திக்கள்ளன் ஒரு படி அதிகம் ஜெயித்ததால் விஜயகாந்த் தான் வின்னர்.

பூந்தோட்ட காவல்காரன் – பார்த்தால் பசு

1988 ஜூனில் விஜயகாந்துக்கு பூந்தோட்ட காவல்காரன் படமும், ராமராஜனுக்கு பார்த்தால் பசு படமும் ரிலீஸ். ராமராஜன் படம் பிளாப். இவற்றில் விஜயகாந்த் படம் வெள்ளிவிழா ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனால் அவர்தான் வின்னர்.

1988 ஆகஸ்டில் ராமராஜனுக்கு எங்க ஊரு காவல்காரன் படமும், விஜயகாந்துக்கு நல்லவன் படமும் ரிலீஸ். இவற்றில் இரு படங்களுமே ஹிட் தான். 1988 தீபாவளி அன்று ராமராஜனுக்கு நம்ம ஊரு நாயகன் படமும், விஜயகாந்துக்கு உழைத்து வாழ வேண்டும் படமும் ரிலீஸ். இந்த மோதலில் இரு படங்களுமே சுமார் ரகம் தான்.

 என் புருசன்தான் எனக்கு மட்டும் தான் – என்னெப் பெத்த ராசா

1989 ஜனவரியில் விஜயகாந்துக்கு என் புருசன்தான் எனக்கு மட்டும் தான் படமும், ராமராஜனுக்கு என்னெப் பெத்த ராசா படமும் ரிலீஸ். ரெண்டு படங்களுமே வெற்றி என்றாலும், விஜயகாந்த் படம் தான் டாப். 1989 மார்ச்சில் விஜயகாந்துக்கு பாட்டுக்கு ஒரு தலைவன் படமும், ராமராஜனுக்கு எங்க ஊரு மாப்பிள்ளை படமும் ரிலீஸ். ரெண்டு படமுமே ஹிட் என்றாலும் விஜயகாந்த் தான் டாப்.

கரகாட்டக்காரன் – பொறுத்தது போதும்

1989 ஜூனில் ராமராஜனுக்கு கரகாட்டக்காரன் படமும், விஜயகாந்துக்கு பொறுத்தது போதும் என்ற படமும் ரிலீஸ். இவற்றில் 1 வருடத்துக்கும் மேலாக ஓடியது கரகாட்டக்காரன். ராமராஜன் தான் வின்னர். 1989 ஆகஸ்ட்டுல விஜயகாந்துக்கு பொன்மனச்செல்வன் படமும், ராமராஜனுக்கு ராஜா ராஜா தான் படமும் ரிலீஸ். இவற்றில் விஜயகாந்த் படம் தான் பிளாக் பஸ்டர் ஹிட்.

1989 தீபாவளிக்கு விஜயகாந்த்துக்கு தர்மம் வெல்லும் படமும், ராஜநடை படமும் ரிலீஸ். ராமராஜனுக்கு தங்கமான ராசா, அன்புக்கட்டளை படங்களும் ரிலீஸ். இவற்றில் விஜயகாந்த் தான் வின்னர். ஏன்னா அவருக்கு 2 படங்களும் ஹிட். ராமராஜனுக்கு தங்கமான ராசா மட்டும் தான் ஹிட்.

மனசுக்கேத்த மகராசா – மீனாட்சி திருவிளையாடல்

1989 டிசம்பரில் ராமராஜனுக்கு மனசுக்கேத்த மகராசா படமும், விஜயகாந்துக்கு மீனாட்சி திருவிளையாடல் படமும் ரிலீஸ். விஜயகாந்த் படம் சுமார். ராமராஜன் தான் வின்னர். 1990 ஜனவரியில் விஜயகாந்துக்கு புலன் விசாரணை படமும், ராமராஜனுக்கு பாட்டுக்கு நான் அடிமை படமும் ரிலீஸ். இரு படங்களுமே வெற்றி என்றாலும் விஜயகாந்த் தான் வின்னர்.

1990 தமிழ்ப்புத்தாண்டுக்கு விஜயகாந்த்துக்கு புதுப்பாடகன் படமும், ராமராஜனுக்கு தங்கத்தின் தங்கம் படமும் ரிலீஸ். இவற்றில் விஜயகாந்த் தான் வின்னர். 1990 ஜூலையில் ராமராஜனுக்கு ஊருவிட்டு ஊருவந்து படமும், விஜயகாந்துக்கு சிறையில் பூத்த சின்னமலர் படமும் ரிலீஸ். இவர்களது படங்களில் ரெண்டுமே வெற்றி தான்.

சத்ரியன் – புதுப்பாட்டு

1990 தீபாவளிக்கு விஜயகாந்துக்கு சத்ரியன் படமும், ராமராஜனுக்கு புதுப்பாட்டு படமும் ரிலீஸ். இந்த மோதலில் விஜயகாந்த் தான் வின்னர். 1991 மார்ச்சில் விஜயகாந்துக்கு கேப்டன் பிரபாகரன் படமும், ராமராஜனுக்கு அண்ணன் காட்டிய வழி படமும் ரிலீஸ். இவர்களில் விஜயகாந்த் தான் வின்னர்.

1991 தீபாவளிக்கு விஜயகாந்துக்கு மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் படம் சுமார். ராமராஜனுக்கு நெஞ்சமுண்டு, நேர்மையுண்டு படமும் ரிலீஸ். இவற்றில் ராமராஜன் படம் பிளாப். சுமாரான வெற்றி என்றாலும் கலெக்ஷன் படி விஜயகாந்த் தான் வின்னர்.

காவியத்தலைவன் – வில்லுப்பாட்டுக்காரன்

1992 அக்டோபரில் விஜயகாந்துக்கு காவியத்தலைவன் படமும், ராமராஜனுக்கு வில்லுப்பாட்டுக்காரன் படமும் ரிலீஸ். இவற்றில் ராமராஜன் தான் ஒரு படி டாப். 1995 ஜூலையில் ராமராஜனுக்கு தேடி வந்த ராசா படமும், விஜயகாந்துக்கு காந்தி பிறந்த மண் படமும் ரிலீஸ். இவற்றில் விஜயகாந்த் தான் வின்னர்.

தாயகம் – அம்மன் கோயில் வாசலிலே

AKV-Tm

AKV-Tm

1996 ஜனவரியில் விஜயகாந்துக்கு தாயகம் படமும், ராமராஜனுக்கு அம்மன் கோயில் வாசலிலே படமும் ரிலீஸ். இந்த மோதலில் விஜயகாந்த் தான் வின்னர். 1997 ஜனவரியில் ராமராஜனுக்கு கோபுரதீபமும், விஜயகாந்துக்கு தர்மசக்கரம் படமும் ரிலீஸ். இவற்றில் ரெண்டுமே பிளாப்.

1999ல் விஜயகாந்துக்கு பெரியண்ணா படமும், ராமராஜனுக்கு அண்ணன், பூ மனமே வா படமும் ரிலீஸ். இவற்றில் விஜயகாந்த் தான் வின்னர். 2001 தீபாவளிக்கு விஜயகாந்துக்கு தவசி படமும், ராமராஜனுக்கு பொன்னான நேரம் படமும் ரிலீஸ். இவற்றில் விஜயகாந்த் தான் வின்னர்.

 

 

 

 

google news
Continue Reading

More in Cinema History

To Top