More
Categories: Cinema News latest news

தளபதி 69 படத்துக்காக விஜய் வச்ச டெஸ்ட்!.. கடைசியா பாஸ் ஆனது எச். வினோத் மட்டும் தானாம்?..

தளபதி 69 படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற கேள்விக்கு ஒரு வழியாக எச். வினோத் என்பது உறுதியாகியுள்ளது. வரும் ஏப்ரல் 14-ம் தேதி கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாக உள்ள நிலையில், அன்றைய தினமே தளபதி 69 படத்தின் இயக்குனர் யார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சதுரங்க வேட்டை படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான எச். வினோத் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்தார். அடுத்து அவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படமும் பவாரியா கொள்ளைக் கூட்டத்தை அடக்கிய ஜான் கிட் எனும் காவல்துறை அதிகாரியின் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான்.

Advertising
Advertising

இதையும் படிங்க: யார வச்சு படம் எடுத்தாலும் பாப்போம்னு நினைச்சீங்களா? ரசிகர்களின் எரிச்சலை பெற்ற திரைப்படம்

அந்த இது படங்கள் அவருக்கு கொடுத்த வெற்றி காரணமாக அஜித் குமாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு எனத் தொடர்ந்து மூன்று படங்களை அஜித் குமாரை வைத்து எச். வினோத் இயக்கினார். வாரிசு படத்துக்கு போட்டியாக துணிவு படம் வெளியான நிலையில், வாரிசு படத்தை விட அந்த படத்தின் கதை விஜய்க்கு பிடித்திருந்ததாக கூறப்படுகிறது.

வெற்றிமாறன், அட்லி, கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஆர் ஜே பாலாஜி என பலரது பெயர்கள் தளபதி 69 படத்தை இயக்கப் போவதாக அடிபட்டு வந்தன. ஆனால், கடைசியில் விஜய் ஓகே செய்தது எச். வினோத் கதையைத் தான் எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த விஜயகாந்த்!.. ஆனா கேப்டன் செஞ்சதுதான் ஹைலைட்!..

கமல்ஹாசனை வைத்து விவசாய அரசியல் கதையை எச். வினோத் எடுப்பதற்காக பல நாட்கள் காத்திருந்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடிக்கச் சென்ற கமல்ஹாசன் எச். வினோத் படத்தை டீலில் விட்டுவிட்டார்.

இந்நிலையில், எச். வினோத் இப்போதைக்கு ஃப்ரீயா இருக்கார். அஜித்தை அவர் 3 படங்களில் ஹேண்டில் செய்துள்ள நிலையில், ஒரு 20 கேள்விகள் வழக்கம்போல தன்னை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களிடம் விஜய் கேட்பதுபோல கேட்டிருக்கிறார். அதற்கு எச். வினோத் அனிதா பதில்கள் விஜய்யை திருப்திப்படுத்த இல்லை என்றால் அவரை ஓகே செய்திருப்பதாக செய்யாறு பாலு புதிய வீடியோவில் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: கமலின் வாட்ச் தொலைந்ததால் உருவான நாயகன் படம்!.. இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா!..

Published by
Saranya M

Recent Posts