Connect with us
panam

Cinema History

யார வச்சு படம் எடுத்தாலும் பாப்போம்னு நினைச்சீங்களா? ரசிகர்களின் எரிச்சலை பெற்ற திரைப்படம்

Panama Pasama: 60கள் காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்த திரைப்படம் பணமா பாசமா திரைப்படம். இந்தப் படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி, நாகேஷ், டி.எஸ் . பகவதி. எஸ். வரலட்சுமி போன்றோர் நடித்திருந்தனர். படத்தை கோபாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். அந்த காலத்தில் சிவாஜி மற்றும் எம்ஜிஆர் படங்களுக்கு கதாசிரியராக இருந்தவர் பாலசுப்பிரமணியம்.

அவர் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்க கோபாலகிருஷ்ணனை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்கு பதிலாக 3000 ரூபாய் கொடுங்கள் என பாலசுப்பிரமணியம் கேட்டாராம். ஆனாலும் கையில் இருந்த 3000 ரூபாயை கோபாலகிருஷ்ணன் அவரது கையில் கொடுத்திருக்கிறார். ஒரு பெரும் பணக்கார ஒருவரின் அரக்கத்தனமான கேரக்டர். அவரை சுற்றி நடக்கும் சம்பவம் என ஒன்லைனை சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: உங்க வாய் சும்மா இருக்க மாட்டிங்குது கோபி… கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமே!

இதை கேட்டதும் கோபாலகிருஷ்ணன் அதை வைத்தே ஒரு படத்தை உருவாக்கிவிட்டார். அதன் பிறகு ஜெமினி, சரோஜா தேவி நடிப்பில் பணமா பாசமா என்ற தலைப்பில் பட விளம்பரத்தை பத்திரிக்கையில் போட்டு விட்டனர். அந்த பெரும் பணக்கார அரக்கத்தனமான கேரக்டருக்கு எஸ்.வரலட்சுமியையும் அவருக்கு கணவராக டி.எஸ்.பகவதி என்றும் அந்த பத்திரிக்கையில் சேர்த்தே போட்டிருக்கின்றனர்.

அதை பார்த்ததும் ரசிகர்கள் கோபாலகிருஷ்ணனுக்கு தொலைபேசியில் வரலட்சுமி ஃபீல்ட் அவுட் ஆகி வெகு நாள்கள் ஆகிவிட்டது. டி.எஸ்.பகவதினாலே யாருனு தெரியாது. சரோஜா தேவிக்கு திருமணம் ஆகி ஃபீல்டிலிருந்தே போய்விட்டார்கள். யார வச்சு படம் எடுத்தாலும் பார்ப்போம் என நினைத்தீர்களோ என கண்டபடி போனில் பேசியிருக்கிறார்கள். ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறார் கோபாலகிருஷ்ணன்.

இதையும் படிங்க: முத்துவை வீட்டை விட்டு துரத்த ரெடியான விஜயா… ஷாக் கொடுக்க போகும் அண்ணாமலை!…

கம்பீரமான பணக்கார திமிரில் கோபாலகிருஷ்ணன் எதிர்பார்த்த நடிப்பு வரலட்சுமியிடம் இருந்து வரவில்லை. அதனால் அவருக்கு பதிலாக சாவித்ரியை நடிக்க வைக்கலாமா என நேராக சாவித்ரியிடமே போய் கேட்டிருக்கிறார். அதற்கு சாவித்ரி இந்தப் படத்தின் ஹீரோ என் கணவர். அவருக்கு மாமியாராக நான் நடித்தால் நன்றாக இருக்காது. வேண்டுமென்றால் அவருக்கு பதிலாக யாரை நடிக்க வைக்கலாம் என அவரிடமே போய் கேளுங்கள், அதன் பின் நான் நடிக்கிறேன் என கூறியிருக்கிறார்.

இருந்தாலு வரலட்சுமியிடமே போய் நடிப்பின் ஆழத்தை எடுத்துரைப்போம் என அவர் வீட்டிற்கு கோபாலகிருஷ்ணன் செல்ல உள்ளே இருந்து சாவித்ரி வந்திருக்கிறார். வரலட்சுமி நாளையில் இருந்து அவர் அபார நடிப்பை வெளிப்படுத்துவார். அப்படி இல்லையென்றால் நானே அந்தப் படத்தில் நடிக்கிறேன் என சாவித்ரி சொன்னாராம். சாவித்ரி சொன்னதை போல மறு நாள் கோபாலகிருஷ்ணன் எதிர்பார்த்ததை போலவே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினாராம் வரலட்சுமி. அவரின் நடிப்புதான் இந்தப் படத்தின் மையமே. அதனால்தான் இந்தளவுக்கு மெனக்கிட்டிருக்கிறார் கோபாலகிருஷ்ணன். படமும் சூப்பர் டூப்பர் ஹிட்.

இதையும் படிங்க: கேப்டன் பேரை சொன்னதும் kpy பாலாவுக்கு கிடைத்த பெரிய சப்போர்ட்! இனிமே சொல்லவா வேண்டும்?

google news
Continue Reading

More in Cinema History

To Top