பிரபுவுக்கு பிடிக்காத கதை!.. விஜயகாந்துக்கு முதல் ஹிட் படம்!.. கேப்டன் ஹீரோவா உருவாகிய அந்த தருணம்!..

எல்லா நடிகர்களுக்கும் முதல் ஹிட் பட வாய்ப்பு என்பது முக்கியமானது. ரஜினி, கமல், பிரபு, சத்தியராஜ், விஜயகாந்த் என 80களில் ஹீரோவாக மாறிய எல்லோரும் வாழ்க்கையிலும் அது முக்கியமானது. கமல் சிறு வயது முதலே நடித்து வந்தார். பிரபுவுக்கு நடிகர் திலகம் சிவாஜியின் மகன் என்பதால் வாய்ப்பு ஒன்றும் கஷ்டம் இல்லை.
ஆனால், விஜயகாந்துக்கு வாய்ப்பு என்பது மிகவும் கடினமாக ஒன்றாகவே இருந்தது. பல முயற்சி மற்றும் அவமானங்களுக்கு பின் ‘இனிக்கும் இளமை’ என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்கிற படத்தில் நடித்தார். அப்படம் ஹிட் அடித்த பின்னரே அவருக்கென ஒரு மார்க்கெட் உருவாகியது.
இதையும் படிங்க: அந்த பாட்டு இல்லாததால் விஜயகாந்த் படத்தை வாங்க மறுத்த வினியோகஸ்தர்கள்! என்ன பாடல் தெரியுமா?
இந்நிலையில், இந்த படத்தில் விஜயகாந்த் நடிக்க வந்தது எப்படி என அப்படத்தின் இயக்குனரும், விஜயின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் கூறியிருக்கிறார். அப்போது எனக்கு 23 வயதுதான் ஆகி இருந்தது. ஒரு கதையை எழுதிவிட்டேன். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் வங்கியில் வேலை செய்தார். அவரின் நண்பர் ஒருவர் படம் தயாரிக்கும் ஆசையில் இருந்தார்.
அவர்கள் இருவரிடமும் இந்த கதையை சொன்னேன். பிரபுவை வைத்து இயக்கலாம் என முடிவு செய்து அவரை சந்தித்து இந்த கதையை சொன்னேன். அதற்கு முன் அப்படி ஒரு ஆக்ஷன் கதையில் பிரபு நடித்ததில்லை. எனவே, அவருக்கு அந்த கதை பிடிக்கவில்லை. ‘பார்க்கலாம்.. சொல்கிறேன்’ என சொல்லிக்கொண்டே இருந்தார். எனக்கு புரிந்துவிட்டது.
இதையும் படிங்க: விஜயகாந்த் வில்லனாகக் கெத்து காட்டிய படங்கள்… டாங்லீக்கே முன்னோடியாக இருந்த கேப்டன்!
இந்த படத்திற்கு புதுமுக நடிகரை நடிக்க வைப்போம். முன்னணி நடிகர்களிடம் இந்த கதையை சொன்னால் கதையை மாற்றிவிடுவார்கள்’ என சொன்னேன். தயாரிப்பாளரும் அதை ஏற்றுக்கொண்டார். பெங்களூரில் இருந்து ஒருவரை வரவழைத்து 3 முறை டெஸ்ட் செய்து பார்த்தோம். ஆனால், செட் ஆகவில்லை. ஒருநாள் வாகிணி ஸ்டுடியோவில் உதவி இயக்குனர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தேன்.
அப்போது கருப்பு நிறத்தில் ஒருவர் ஸ்கூட்டரில் போனார். அவரின் கண்ணை பார்த்ததும் எனக்கு பிடித்துப்போனது. உதவியாளர்கள் ஓடிப்போய் அவரை நிறுத்தி என்னிடம் அழைத்து வந்தனர். ‘சினிமாவில் நடிக்க ஆர்வம் இருக்கா?’ என கேட்டேன். ‘சார் இனிக்கும் இளமை என்கிற படத்தில் நடித்து வருகிறேன்’ என சொன்னார். அவர்தான் விஜயகாந்த். அப்படி உருவான படம்தான் சட்டம் ஒரு இருட்டறை. அந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது’ என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியிருந்தார்.