பேட்டியின் போது 'திருதிரு'வென முழித்த தனுஷ்.... அந்த விஷயத்தில் உதவிய ஐஸ்வர்யா..!
நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகமானார். பக்கத்து வீட்டுப் பையன் போல இருந்ததால் தமிழ்சினிமா ரசிகர்கள் அவரை உச்சிமுகர்ந்து வரவேற்றனர். ஆட்டத்தில் பட்டையைக் கிளப்பினார். அவர் தனது படங்களின் பாடல்களைத் தானே பாடியும் அசத்தினார். போகப் போக அவர் நடிப்பும் மெருகேறியது. தற்போது இயக்குனராகவும் மாறிவிட்டார்.
ஒரு சிலை தன்னைத்தானே செதுக்கி மேலும் மேலும் மெருகேறுவது போல நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் சாதாரண பையனாக இருந்து ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அளவு வளர்ந்துவிட்டார். இவரது இந்த அபார வளர்ச்சிக்கு ஆங்கிலம் அவசியம் அல்லவா. அதை எப்படி கற்றார் என்பதைப் பார்ப்போம்.
நடிகர் தனுஷ் படப்பிடிப்பு நேரங்கள் போக மற்ற நேரங்களில் எல்லாம் புத்தகங்கள் படிக்க செலவிடுவாராம். ஒரு காலத்தில் தனுஷ் தனது படங்களில் எங்காளு தர லோக்கலுன்னு ரசிகர்கள் சொல்வதற்கு ஏற்ப படங்களில் நடித்து வந்தார். அதே தனுஷ் தற்போது என் தலைவன் ஹாலிவுட் லெவல்னு சொல்வதற்கு ஏற்ப அசத்தலாக நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிக்க வந்த காலகட்டத்தில் தனுஷை ஆங்கில நாளிதழ் ஒன்று பேட்டி கண்டதாம். அப்போது தயங்கி தயங்கி பதில் சொன்னாராம். அதன் பின்னர் டாவின்சி கோட் மூலம் வாசிப்புப் பழக்கத்தைத் தொடங்கினாராம்.
இவரது மனைவி ஒரு புத்தகப்பிரியர். அவர் சிபாரிசின் பேரில் பல புத்தங்களைப் படித்து தன் வாசிப்பு எல்லைகளை விரிவாக்கினாராம். கடைசியில் வீட்டில் ஒரு புத்தக அலமாரியையே உருவாக்கி விட்டாராம்.
புத்தக வாசிப்பு குறித்து தனுஷ் சொன்னது இதுதான். முதன் முதலா புத்தகம் வாசிக்கறதுக்கு கஷ்டமா இருந்துச்சு. ஒரு அத்தியாயம் படிக்கிறதுக்குள்ள தூக்கமே வந்துடும். ஒரு புத்தகத்தை முடிக்கிறதுக்கு ஆறேழு மாசமாயிடும். ஆனால் புது மொழியைக் கற்றுக்கொள்ளணும்கற எனக்குள்ள இருந்த ஆர்வம் என்னை மேலும் வாசிக்கத் தூண்டியது.
அப்போது எனக்கு வாசிக்கும் பழக்கம் இல்லையே என வருந்துகிறேன்.
இதையும் படிங்க... குடிகார அண்ணன்! இளையராஜாவை பத்தி கங்கை அமரன் சொன்னது உண்மைதானா?
இழந்த நாள்களை ஈடு செய்ய கிடைக்கும் நேரங்களில் எல்லாம் வாசிக்கிறேன் என்கிறார். இப்போது அவரது ஆங்கிலப்புலமை, வொக்கபுலரி ஸ்கில் அதிகமாகி உள்ளதாம். ஹாலிவுட் படத்தில் கூட ஆங்கிலம் பேசி நடிக்க முடியும் என்ற அளவில் இவரது திறமை வளர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.