விவேக்குடன் கமல் நடித்த அந்த அனுபவம்...! இந்தியன் 3 இப்படித்தானாம்..!

உலகநாயகன் கமல், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 படத்துக்கான டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்தியன் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு இந்தியன் 2 வருவால் படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்ப கூடியுள்ளது.

அது மடடுமல்லாமல் இது அரசியல் பேசும் படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமலும் அரசியல்வாதி ஆகிவிட்டார். அதனால் படத்தில் என்ன சொல்லப் போகிறார்? எப்படி சம்பவங்கள் செய்யப் போகிறார் என்று அரசியல்வாதிகளும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்தியன் 2 பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மறைந்த நடிகர் விவேக் குறித்து கமல்ஹாசன் இவ்வாறு பேசியுள்ளார்.

இதையும் படிங்க... இந்தியன் 2வில் ரஜினியை இத்தனை இடங்களில் பொளந்துட்டாரே கமல்!.. ப்ளூ சட்டை மாறன் ஆரம்பிச்சிட்டாரே!..

பியு சின்னப்பா நடிச்ச உத்தமபுத்திரன் படத்துக்குப் பிறகு அந்தப் படத்தில சிவாஜி தான் நடிச்சார். அதே மாதிரி ஷங்கர் சார் இயக்கிய இந்தியன் படத்துல முதல் பாகத்துல நடிச்ச எனக்கு 2ம் பாகமும் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. இந்தியன் படத்தின் படப்பிங்கில் சார் 2வது பாகம் எடுத்துடலாம்னு சொன்னேன்.

முக்கியமாக 2ம் பாகம் எடுப்பதற்கு கருவை இன்றும் கொடுத்துக் கொண்டு இருக்கும் அரசியலுக்கு நன்றி. இந்த கரப்ஷன் இன்னும் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தாவின் வருகைக்குப் பெரிய அர்த்தமே இருக்கு. நல்லவங்க, கெட்டவங்க எல்லாருக்கும் நன்றி சொல்லணும். இன்னும் சொல்லப் போனா இருக்கறவங்க இல்லாதவங்களுக்குக் கூட நன்றி சொல்லணும்.

இந்த மேடையில் நான் ரொம்ப சந்தோஷமா ஒரு தலைமுறையுடன் நடித்துக் கொண்டு இருக்கிறேன். நான் மதிக்கிற நல்ல நடிகர்கள் என் நண்பர்கள் இப்போது என்னுடன் இல்லை. மனோபாலா, நெடுமுடி வேணு, விவேக் போன்றவர்கள் இப்போது இல்லை. இப்ப தான் விவேக்குடன் நடித்த மாதிரி இருக்கு.

இதையும் படிங்க... ரஜினி இத சொன்னதும் ஷாக் ஆயிட்டேன்! என்கிட்ட போய் இப்படி? சிங்கம் புலி பகிர்ந்த ரகசியம்

காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதற்கு இந்தியன், இந்தியன் 2 உதாரணம். நான் திரும்பிப் பார்க்கறதுக்குள்ள ஷங்கர் இன்னும் இளைஞராகவே இருக்காரு. என்னைத் தாத்தாவா போட்டதால வித்தியாசம் தெரியல.

மேடைல ரவிவர்மன் சொன்னாரு. ஷங்கரும், கமலும் நினைச்சாலே இனி இப்படி எடுக்க முடியாதுன்னு. அதையும் எடுத்துருக்கோம். அது தான் இந்தியன் 3.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it