அடுத்த சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்தே ஓயல.. அதுக்குள்ள அடுத்த விஜயா!.. கொஞ்சம் சும்மா இருங்கப்பா!...

by prabhanjani |
vijay
X

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று சமீபகாலமாக விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால், ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் வாக்குவாதமும், சண்டையும் வெடித்துள்ளது. இந்த பஞ்சாயத்து, இன்று வரை ஓய்ந்த பாடு இல்லை, அதற்குள் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போகிறார் என்ற தகவல் வெளியானது.

vijay2

vijay2

இதனையடுத்து நடிகர் விஜய்யின் இடத்தை அடுத்து எந்த நடிகர் பிடிப்பார் என்ற தனது கணிப்பை தயாரிப்பாளர் டி.சிவா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் விஜய் சினிமாவில் இருந்து விலகினால் வெற்றிடம் இருக்காது. யாரை நம்பியும் சினிமா இல்லை. சினிமாவை நம்பி தான் அனைவரும் இருக்கிறார்கள். அந்த இடத்தை வேறு நடிகர் யாராவது பிடித்துவிடுவார்கள்.

karthi

எனக்கு தெரிந்து அந்த இடத்தை கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன் இவர்கள் மூவரில் யாராவது ஒருவர் பிடித்துவிடுவார்கள் என தெரிவித்துள்ளார். இவர்கள் எல்லாம் கடுமையாக மெனக்கெடுகின்றனர். ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு கெட்டப்களில் நடித்து வருகின்றனர். எனவே அடுத்தடுத்து 3 படங்கள் ஜாக்பாட் அடித்தால் போதும், அடுத்து அந்த நடிகர் விஜய்யின் இடத்தை பிடித்துவிடுவார்.

dhanush1

dhanush1

3 படங்களில் ஹிட் கொடுத்தால், 75 கோடி தாண்டி சம்பளம் தர தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பார்கள். கார்த்தி, சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோரின் படங்கள் வெற்றிபெறவில்லை என்றால் கூட தயாரிப்பாளர்கள் பெரிதாக நஷ்டம் அடைவதில்லை. இவர்களின் சுமாரான படங்கள் கூட நன்றாக வசூல் செய்கிறது என்று டி.சிவா கூறியுள்ளார்.

siva1

sivakarthikeyan1

ஒருவேளை விஜய் 3 வருடம் சினிமாவில் இருந்து விலகினால், அதிலும் ஒரு நல்லது இருக்கிறது. இதனால் மற்ற நடிகர்கள் அந்த இடத்தை பிடிக்க இன்னும் வேகமாக ஓடுவார்கள் என்று தயாரிப்பாளர் டி.சிவா தெரிவித்துள்ளார். மேலும் மார்கெட் முடிந்த பிறகு சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருகிறேன் என்று கூறுவதை விட, 150 கோடி சம்பளம் வாங்கும் போதே அரசியலுக்கு வருகிறேன் என்று கூறுவது தனி கெத்து தான் என்று விஜய் குறித்து தயாரிப்பாளர் டி.சிவா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க- எதிர்பார்ப்பை எகிறவைத்து வெளிவராமல் போன திரைப்படங்கள்!.. சிக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பா!…

Next Story