Connect with us
movie

Cinema News

எதிர்பார்ப்பை எகிறவைத்து வெளிவராமல் போன திரைப்படங்கள்!.. சிக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பா!…

ஒரு படம் எடுத்து முடித்து அதனை வெளியிடுவது சாதாரண விஷயம் கிடையாது. அதில் பல பிரச்சனைகள் உள்ளது. நடிகர், நடிகைகள், இயக்குநர், தயாராப்பாளர் தொடங்கி அனைவரும் முழு ஒத்துழைப்பையும் தர வேண்டும். பல படங்கள் பிரச்சனை வந்து பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. பல படங்கள் முற்றிலும் எடுத்து முடிக்கப்பட்டு வெளியாகாமல் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நிதி பற்றாக்குறை, மனகசப்பு அல்லது வேறு சில பிரச்சனைகள் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அப்படி கஷ்டப்பட்டு எடுத்து முடிக்கப்பட்டு, இன்றுவரை வெளியாகாமல் இருக்கும் 7 தமிழ் படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பார்ட்டி

party

வெங்கட் பிரவு இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் இசையில் சிவா, ஜெய், சந்திரன், நிவேதா பெத்துராஜ் ரெஜினா கேசன்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் பார்ட்டி. இந்த படம் முழுவதும் எடுத்து முடித்து கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக தயாராக இருந்தது. ஆனால் இன்று வரை வெளியாகவில்லை.

நரகாசூரன்

naragasuran

துருவங்கள் 16 படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்து இயக்கிய படம் நரகாசூரன். இந்த படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரன், சந்தீப் கிசன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை தயாரித்த கௌதம் மேனனுக்கும் இயக்குநர் கார்த்திக் நரேனுக்கும் இடையே ஏதோ பிரச்சனை என்று கூறப்படுகிறது. 2017ம் ஆண்டே எடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை வெளியாகவில்லை.

இடம் பொருள் ஏவல்

idam porul eval

சீனுராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா உள்ளிட்டோர் நடிப்பில் எடுக்கப்பட்ட படம் இடம் பொருள் ஏவல். இந்த படம் 2018ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டது. ஆனால் இது வரை வெளியாகவில்லை.

சர்வர் சுந்தரம்

server sundaram

ஆனந்த் பால்கி இயக்கத்தில், சந்தானம், நடிகர் நாகேஷின் பேரனான பிஜேஷ் நாகேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் 2017ம் ஆண்டிலேயே எடுக்கப்பட்ட படம் சர்வர் சுந்தரம். ஆனால் பல ஆண்டுகளாக இந்த படம் வெளியாகாமல் இருக்கிறது. 

ஒத்தைக்கு ஒத்த

atharva

அறிமுக இயக்குநர் பர்னீஷ் இயக்கத்தில் அதர்வா, ஸ்ரீவித்யா நடிப்பில் எடுக்கப்பட்ட பம் ஒத்தைக்கு ஒத்த. கொரோனாவால் வெளியாகாமல் தள்ளிப்போன இந்த படம் இது வரை வெளியாகமேலே இருக்கிறது.

மதகஜராஜா

madagajaraja

விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட திரைப்படம் மதகஜராஜா. இந்த படமும் இதுவரை வெளியாகவே இல்லை.

துருவ நட்சத்திரம்

vikram

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் 2017ம் ஆண்டே வெளியாக இருந்த படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் டீசரை பார்த்த பலர் இந்த படத்திற்காக ஆவலாக காத்திருக்கின்றனர். இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படம் வெளியாகிவிடும் என்று கூறப்படுகிறது. 

இதையும் படிங்க- யாரும்மா நீங்கலாம்!. எப்படா நீங்கலாம் திருந்துவீங்க!.. மாவீரனை நக்கலடித்த புளூசட்ட மாறன்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top