Connect with us
blue satta

Cinema News

யாரும்மா நீங்கலாம்!. எப்படா நீங்கலாம் திருந்துவீங்க!.. மாவீரனை நக்கலடித்த புளூசட்ட மாறன்!..

தமிழ் சினிமாவில், ஏன் உலக சினிமா அளவில் எழுதப்படாத விதி ஒன்று இருக்கிறது. அது விபத்து நடக்கும்போது ஒரு குழந்தை அங்கே சிக்கி கொள்ளும். ஹீரோ போய் அந்த குழந்தையை காப்பாற்றுவார். கடந்த 50 வருடங்களில் பல மொழி திரைப்படங்களிலும் இந்த காட்சியை பார்த்துவிட்டோம். நமது ஹீரோ சூப்பர் ஹீரோ என்பதை ரசிகர்களிடம் காட்டுவதற்கு இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கும் முக்கியமான காட்சி இதுவாகத்தான் இருக்கும். ஹாலிவுட்டின் ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் படங்களிலும் கண்டிப்பாக இப்படி ஒரு காட்சி இருக்கும்.

maveeran

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாவீரன் படமும் கிட்டத்தட்ட ஒரு சூப்பர் ஹீரோ படம்தான். இத்தனைக்கும் இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோனே அஸ்வின் இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயன் போன்ற நடிகர் ஹீரோ என்றதும் கதையில் பல சமரசங்கள் செய்து ஹீரோயிசத்தை அதிகம் வைக்கும் நிலைக்கு அவரும் தள்ளப்பட்டார்.

இதையும் படிங்க: இது எனக்கு நடந்த மாதிரியே இருக்கு!.. டப்பிங்கில் கதறி அழுத யோகிபாபு!.. என்ன படம் தெரியுமா?..

இந்த படத்தின் இறுதிக்காட்சியிலும் இடிந்து விழும் பில்டிங்கில் குழந்தை ஒன்று மாட்டிக்கொள்ளும். அதை ஹீரோ சிவகார்த்திகேயன் போய் காப்பாற்றி தூக்கி வருவார். முன்புபோல் இல்லை. இப்போது சமூகவலைத்தளங்களில் இப்போதெல்லாம் நெட்டிசன்கள் இதுபோன்ற கிரிஞ்ச் கிளைமேக்ஸ்களை கிண்டலடிக்க துவங்கிவிட்டனர்.

meems

இந்நிலையில், மாவீரன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை கிண்டலடித்து நெட்டிசன் ஒருவர் உருவாக்கிய மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘அதான் கட்டிடம் இடிய போகுதுன்னு தெரியும்ல. அப்புறம் ஏம்மா குழந்தைய வீட்டுக்குள்ளயே விட்டுட்டு வந்த’ என்கிற கேள்விக்கு ‘அப்பதான சார் ஹீரோ போய் காப்பாத்த முடியும்’ என அந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

twitt

இந்த மீம்ஸை டிவிட்டரில் பகிர்ந்துள்ள பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்டமாறன் ‘எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் சிவகார்த்திகேயன் படங்கள் வரை எரியும்/ இடியப்போகும் வீட்டினுள் குழந்தையை தவிக்க விட்டு வெளியே ஓடிவரும் அம்மாக்கள்..Very Selfish. யாரும்மா நீங்க எல்லாம்?’ என பதிவிட்டுள்ளார். மேலும், கமெண்ட் செக்சனில் ‘சிவகார்திகேயனுக்கு மெகா சீரியல் ரசிகைகளும், 2k சிஸ்டர்களும்தான் பெரிய பலம். எனவே, அவர் சேட்டிலைட் டி.ஆர்.பி.க்காக இது போன்ற படங்களில் தொடர்ந்து நடிப்பார்’ என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிகிச்சைக்கு 78 லட்சம்! நா.முத்துக்குமார் மறைவிற்கு சில நாட்கள்முன் நடந்த திக் திக் சம்பவம்..

google news
Continue Reading

More in Cinema News

To Top