இது எனக்கு நடந்த மாதிரியே இருக்கு!.. டப்பிங்கில் கதறி அழுத யோகிபாபு!.. என்ன படம் தெரியுமா?..

சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் கூட்டத்தில் ஒருவராக நின்றவர் யோகிபாபு. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான லொல்லு சபா நிகழ்ச்சியின் பல எபிசோட்களில் கூட்டத்தில் ஒருவராக இவர் இருப்பார். அதன்பின் மெல்லெ மெல்ல சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

yogi

வடிவேலு அதிக படங்களில் நடிக்கவில்லை. மேலும், நடிகர் விவேக்கும் மறைந்துவிட, ஒருபக்கம் நடிகர் சூரியும் விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்கசில வருடங்கள் நடிக்க சென்றுவிட அந்த இடைவெளியை யோகிபாபு பயன்படுத்திக்கொண்டார். அவரை விட்டால் காமெடிக்கு வேறுவழியில்லை என்கிற நிலை உருவாகிவிட யோகிபாபுவுக்கு அடிச்சது அதிர்ஷம். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். இப்போதும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: சீரியல்ல தான் சேலை எல்லாம்.. பப்ல டிரெஸ்ஸே கழண்டு விழுந்துடும்.. பவுன்சர் லக்‌ஷ்மி அக்காவின் ஓபன் டாக்!

கோமாளி படத்தில் யோகிபாபுவுக்கு நல்ல வேடம் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாந்தன். அப்படத்தில் ஜெயம் ரவியின் நண்பனாக படம் முழுக்க வரும் வேடத்தை அவருக்கு கொடுத்தார் பிரதீப். அதேபோல், அடுத்து அவர் இயக்கி நடித்த லவ் டுடே படத்தில் யோகிபாபுவுக்கு முக்கிய வேடத்தை கொடுத்தார். குண்டாக இருப்பதாலும், அசிங்கமாக இருப்பதாகவும் தன்னை கருதும் யோகிபாபு தன்னுடைய செல்போனை தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்ணிடம் கொடுக்கவே மாட்டார். ஏனெனில், வாட்ஸ்அப் குரூப்பில் தன்னை பற்றி அசிங்கமாக தனது நண்பர்கள் விமர்சிப்பதை அவர் தெரிந்துகொள்ளக்கூடாது என நினைப்பார்.

yogi

இந்த படத்தில் யோகிபாபு நடித்தது பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய பிரதீப் ‘இந்த படத்தின் டப்பிங்கின்போது யோகிபாபுவால் பேசமுடியவில்லை. ஏனெனில் இது எல்லாம் என் வாழ்க்கையில் நடந்தது போலவே இருக்கிறது. நான் மொத்தமா ஆஃப் ஆயிட்டேன். நாளைக்கு வந்து பேசுறேன் என்றார். அடுத்தநாள் வந்த பின்னரும் அவரால் பேச முடியவில்லை. அதன்பின் அவரே சில வசனங்களை சொன்னார். ‘சாணி உருண்டை மாதிரி இருக்க’ என்கிற வசனத்தையெல்லாம் அவர் சேர்த்து பேசினார். அவரை அப்படியெல்லாம் பலரும் அசிங்கப்படுத்தியதாக கூறினார்’ என பிரதீப் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: இனிமே ஃபாரின் போய் ஆட்டம் போட முடியாது.. நடிகர்களுக்கு ஆப்பு வைத்த தயாரிப்பாளர் சங்கம்!..

 

Related Articles

Next Story