ரெட்ரோ படத்துக்கு இவ்ளோ நஷ்டமா? இனி சூர்யாவுக்கு முகாந்திரம் அந்தப் படம்தான்!

by sankaran v |   ( Updated:2025-05-04 05:42:44  )
retro surya movie
X

retro surya movie

Retro: சூர்யாவுக்கு சமீபத்தில் ரெட்ரோ படம் வெளியானது. கம்பேக் கொடுக்கும்னு நினைச்சா படத்தைப் பார்த்த பலரும் நெகடிவா விமர்சனங்கள் சொல்றாங்க. இந்தப் படத்துக்கு எவ்வளவு நஷ்டம்? அடுத்து அவரு மீண்டு வர என்ன படம் உதவும் என்பது குறித்து பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கர் மூவீஸ் பாலாஜி பிரபு சில தகவல்களைச் சொல்கிறார். என்னன்னு பாருங்க.

சிங்கம், காக்க காக்க மாதிரி ஆக்ஷன் படங்கள் நடிச்சாரு. வேல், நந்தா, பிதாமகன், கஜினி, ஏழாம் அறிவு என வேற வேற வெரைட்டி ஜானர்ல படம் கொடுத்தாரு. 24 படம் ஓடலை. ஆனா தரமான படம். அதனால ஆடியன்ஸ்கிட்ட பெரிய வரவேற்பு இருந்தது. சில தோல்விப்படங்களும் வந்தது. அப்புறம் ஜெய்பீம், சூரரைப் போற்று ஓடிடியில வந்தாலும் பெரிசா பேசப்பட்டது. சிங்கம் 3 வந்ததுக்கு அப்புறம் 13 வருஷ இடைவெளியில சூர்யாவுக்கு ஒரு தியேட்டரிக்கல் ஹிட் வரல.

கங்குவாவும் பெரிய அளவில் ட்ரோலாச்சு. ஆடியோ வெளியீட்டு விழாவுல சூர்யா வாயைப் பொளந்துக்கிட்டு பார்ப்பீங்கன்னு சொன்னாரு. தயாரிப்பாளர் 2000 கோடி அடிக்கும்னாரு. அது பெரிய ட்ரோலில் சிக்கியது. விஜய், அஜித்துக்குப் பிறகு சூர்யா. ரெட்ரோ கம்பேக்கான்னு போனாங்க. ரசிகர்களுக்கே சோர்வு. ஆனாலும் கனிமா, கண்ணாடி பூக்கள் சாங், பைட் எல்லாம் நல்லாருந்தது. படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் வந்தது. பொதுமக்கள் பார்க்கும்போது படம் நல்லா இல்லைன்னு சொல்றாங்க.

தந்தை, மகனுக்கு இடையில் நெருக்கமான பாசமான சீன் கிடையாது. இந்தப் படத்துல எல்லாமே மைனஸ்தான் இருக்கு. கங்குவாவை விட முதல் நாள் கலெக்ஷன் கம்மி தான். 2வது, 3வது நாள் வசூல் சரிவு தான். இது கூட வந்த டூரிஸ்ட் ஃபேம்லி வேற லெவல். அவ்ளோ கூட்டமும் அந்தப் படத்துக்குத்தான் போகுது.

#image_title

நல்ல எடுத்துருக்காங்க. வேற எந்த பஞ்ச் டயலாக்கும் கிடையாது. ஆக்ஷன் படம் எடுத்தாலும் கதையோட எடுங்க. அந்த காலத்துல முரட்டுக்காளை, சகலகலாவல்லவன், பில்லா படம் எல்லாம் கமர்ஷியல்தான். ஆனா கதையோடு வந்தது. அப்படி படங்கள் கொடுங்க. வெற்றிமாறனின் வாடிவாசல் தான் வழியைக் காட்டணும்.

ஏன்னா அவரைப் பொருத்தவரை கதையோடவே டிராவல் பண்ற மாதிரி தான் பாட்டு, பைட் எல்லாம் வச்சிருப்பாரு. அதனால வெற்றிமாறனின் வாடிவாசல் மாதிரி படங்கள்ல நடிச்சி சூர்யா சீக்கிரத்துல ஒரு ஹிட்டைக் கொடுக்கணும். அவரு நல்ல நடிகர். அவரோட மார்க்கெட் பழையபடி வரணும். என்கிறார் பாலாஜி பிரபு.

Next Story