மௌனம் சாதிக்கும் கமல்!... விஜய் சேதுபதி, யோகி பாபு பக்கம் சாய்ந்த ஹெச்.வினோத்…

by Akhilan |   ( Updated:2024-01-18 07:34:57  )
மௌனம் சாதிக்கும் கமல்!... விஜய் சேதுபதி, யோகி பாபு பக்கம் சாய்ந்த ஹெச்.வினோத்…
X

HVinoth: கமல் படு பம்பரமாக ஓடிக்கொண்டு இருக்கிறார். அவர் இல்லனு கார்த்திக்கிட்ட போனா அதுலையும் பிரச்னை. இதனால் தற்போது ஹெச்.வினோத் ஒரு புதிய ரூட்டை பிடித்து இருக்கிறாராம். இதுகுறித்து வெளியாகி இருக்கும் சுவாரஸ்ய தகவல்கள்.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமலை வைத்து ஹெச்.வினோத் ஒரு படத்தினை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் சொன்ன போலீஸ் கதை கமலை கவரவில்லையாம். இதனால் அந்த கதை வேண்டாம் என்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் இனி இங்கு இருப்பது சரியில்லை என அந்த படத்தில் இருந்தே ஹெச்.வினோத் விலகி விட்டாராம்.

இதையும் படிங்க: உருட்டு உருட்டு!.. கேப்டன் மில்லர் வசூலை பங்கம் செய்த புளூசட்ட மாறன்..

தீரன் படத்தின் இரண்டாம் பாகத்தினை கார்த்தியை வைத்து இயக்கலாம் என்ற முடிவில் இருந்தவருக்கு அங்கும் ஒரு சிக்கல். பிஸியாக நடித்து வரும் கார்த்தி மே மாதம் வரை வேறு படத்துக்கு தாவவே முடியாதாம். இதனால் தீரன் 2 மே மாதத்திற்கு பின்னரே தொடங்கும் நிலை உருவாகி இருக்கிறது.

இவர்களை நம்பி சரிப்பட்டு வராது என முடிவு செய்த ஹெச்.வினோத் தற்போது யோகி பாபு மற்றும் விஜய்சேதுபதியை வைத்து ஒரு படத்தினை இயக்க முடிவு செய்து இருக்கிறாராம். இப்படம் ஒரு அரசியல் காமெடி படமாக உருவாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே இனி நோ வில்லன் என விஜய் சேதுபதி அறிவித்து இருக்கும் நிலையில் ஹீரோவாக இனி அவரை நிறைய படங்களில் பார்க்கலாம் என்ற தகவலும் இணையத்தில் உலா வருகிறது.

இதையும் படிங்க: போட்டுத்தாக்கு! களைகட்டும் நெட்ஃபிளிக்ஸ்.. இந்தாண்டு ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள்

இந்த மூவர் கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் படத்தின் ஷூட்டிங்கை விரைவில் தொடங்கவும் முடிவு செய்துள்ளார்களாம். 2024க்குள் இறுதிக்குள் இப்படத்தினை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Next Story