More
Categories: Cinema News latest news

நடுத்தெருவில் நிர்கதியாக நிக்க வைத்தவர் மிஷ்கின்… வேறு ஒருவரா இருந்தால் நெஞ்சு வலியே வந்திருக்கும்! விஷால் தடாலடி!

தமிழ் சினிமாவில் நண்பர்களாக வலம் வந்த இருவர் பிரியும் போது அது கண்டிப்பாக பெரிய வைரல் நிகழ்வாக அனைவராலும் பார்க்கப்படும். அப்படி தான் இயக்குனர் மிஷ்கின் மற்றும் விஷால் இடையே ஏற்பட்ட விரிசலும் இணையத்தில் காட்டுத்தீயாகி பரவி பலரிடத்திலும் பல கிசுகிசுக்கள் எழுந்தன.

விஷால் நடித்து தயாரித்த திரைப்படம் துப்பறிவாளன். இப்படத்தினை மிஷ்கின் இயக்கி இருந்தார். முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென மிஷ்கின் அப்படத்தில் இருந்து விலகினார். தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தினை தானே இயக்கவும் இருப்பதாக விஷால் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது.

Advertising
Advertising

இதையும் படிங்க : தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க!.. நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி….

அடுத்த சில நாட்களிலேயே விஷால் தரப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் மிஷ்கின் இந்த கதை எழுதவே 35 லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறார். அவர் படத்துக்காக 10 கட்டளை எல்லாம் சொன்னார் என விலாவாரியாக குற்றச்சாட்டுகளை அடிக்கினார் விஷால். அவரை தொடர்ந்து ஒரு கூட்டத்தில் பேசிய மிஷ்கின் ஒருத்தன் 35 லட்சம் செலவு செய்தால் அவன் இயக்குனரே இல்லை.

நான் இத்தனை லட்சம் செலவு செய்ததை நிரூபிக்க வேண்டும். முதலில் வேறு ஒருவர் தயாரிக்க இருந்தார். விஷால் தான் பிடிவாதத்துடன் தானே தயாரிக்க இருப்பதாக அறிவித்தார். கடன் இருக்கும் போது இந்த பிரச்னை வேண்டாம் என்றேன் அவர் தான் கேட்கவில்லை. ஒரு கலைஞன் இப்படி இருக்கும் போது எப்படி வேலை செய்ய முடியும் என்றார்.

இதையும் படிங்க : ஒரு படம் ஹிட் அடிச்சா இப்படியா!. வேற லெவலில் சம்பளம் கேட்கும் ரஜினி!. கையை பிசையும் தயாரிப்பு நிறுவனம்..

இதை தொடர்ந்து தற்போதைய பேட்டி ஒன்றில் விஷாலிடம் மிஷ்கினை மன்னிப்பீங்களா? எனக் கேட்கப்பட்டது. மன்னிக்கலாம் ஒன்னும் இல்லை. நான் லண்டனில் தெருவில் நிர்கதியாக நிற்க வைத்தவர். அந்த கடிதத்தினை படித்த போது வயசு உடைய ஆளாக இருந்தால் நெஞ்சு வலியே வந்து இறந்து இருப்பார். அவர் மீது இருந்த மரியாதை அப்படியே தான் இருக்கிறது. ஆனால் என்னால் இனி அவருடன் வேலை செய்யவே முடியாது. அவர் படம் எனக்கு பிடிக்கும். முதல் ஷோவில் போய் பார்ப்பேன். அந்த லிமிட்டில் இருந்து கொள்வது தான் நல்லது எனக் குறிப்பிட்டார்.

 

Published by
Akhilan

Recent Posts