ஒரு துளி கூட ஆசை இல்ல.. அப்போ ஒரு முடிவோடதான் வந்திருக்காரு.. வைரலாகும் விஜயின் வீடியோ

Actor Vijay: ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் பரப்பரப்பிற்கு ஆளாக்கியிருக்கிறார் விஜய். நேற்று தனது கட்சியின் பெயரை அறிவித்ததும் விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சியில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் அவர்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள்.

சினிமாவில் ஒரு பெரிய ஆளுமையாக இருந்த விஜய் இப்போது அரசியலிலும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே அரசியலுக்குள் நுழைந்திருக்கிறார். அதுவும் ஒரு பெரிய அறிக்கையை அறிவித்தும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இதையும் படிங்க: உடைந்த ரோகினி ரகசியம்!… இந்த அண்ணாமலை யாரு பக்கம் தான் இருக்காரு!…

முழு நேர அரசியல் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே தன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல ஊர்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார் விஜய். இருந்தாலும் அந்த தலைவர் என்ற எண்ணம் இன்னும் விஜய் மீது மக்களிடம் திரும்பவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நடிகர் என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்கள். இந்த நிலையில் விஜயின் ஒரு பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. தலைவா படம் வந்த நேரம் அது. அப்போது விஜயிடம் அரசியல் பற்றி கேட்கப்பட்டது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடிக்க வந்த வாய்ப்பு!.. மிஸ் ஆயிடுச்சேன்னு இப்ப வரைக்கும் ஃபீல் பண்ணும் கமல்!..

அதில் விஜய் ‘அரசியல் ஆசை எல்லாம் இல்லங்க. அதுவும் அரசியலுக்கு வரப் போகிறேன் என்று எங்கேயும் நான் சொல்லவில்லை. ஆனால் இதுபோன்ற செய்திகள் பத்திரிக்கைகளில் வரும் போது பார்த்து படித்து சிரிச்சிட்டு விட்டுருவேன்’ என்று பதில் கூறியிருக்கிறார். ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்று விஜய் அரசியலுக்குள் வந்திருக்கிறார் என்றால் அதற்கு பின்னனியில் பெரிய காரணமே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

 

Related Articles

Next Story