Cinema History
இனி என்னால் நடிக்க முடியாது… இயக்குனரின் காலில் விழுந்த லைலா… என்ன நடந்தது?
துறுதுறு கண்கள் சுட்டியான நடிப்பாக தமிழ் ரசிகர்கள் அறிந்த நடிகையாக இருப்பவர் தான் லைலா. ஆனால் அவரையே அழ வைத்து இனி நடிக்கவே முடியாது என காலில் ஒரு இயக்குனர் விழ வைத்து இருக்கிறார் என்றால் ஆச்சரியம் தானே. அந்த சம்பவம் குறித்த சுவாரஸ்ய சம்பவம் வெளியாகி இருக்கிறது.
எகிரே பவுரமா என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் லைலா. இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பினை கொடுத்த நிலையில் தமிழிலும் முன்னணி இயக்குனர்களிடம் இருந்து வாய்ப்புகள் வந்தது. ஆனால் லைலா அது இரண்டு நாயகிகள் கதை என்பதற்காக உடனே நோ சொல்லி விட்டாராம்.
இதையும் படிங்க : அப்பாவை விட அஜித் தான் கெத்து… தடாலடியாக பதில் சொன்ன ஜேசன் விஜய்.. கடுப்பான ரசிகர்கள்!
இதை தொடர்ந்து கள்ளழகர் படம் மூலம் தமிழுக்கு எண்ட்ரி கொடுத்தார். அடுத்து அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையாத காரணத்தால் சின்ன ரோலாக கிடைத்த முதல்வன் படத்தினை ஒப்புக்கொண்டார். தொடர்ச்சியாக அவருக்கு தமிழில் அடையாளம் கிடைக்க உதவிய படங்களாக பார்க்கப்படுவதுஅஜித்துடன் தீனா படமும், பிரசாந்துடன் பார்த்தேன் ரசித்தேனும் தான்.
அதன்பின் விக்ரமுடன் தில்லும் பிதாமகனும் லைலாவை மிகப்பெரிய இடத்துக்கு கொண்டு சென்றது. உள்ளம் கேட்குமே திரைப்படத்தில் அவரது பாத்திரம் செம லைக்ஸ் வாங்கியது. பல வருட இடைவேளை எடுத்துக்கொண்ட லைலா சின்ன சின்ன விளம்பரங்களை மட்டுமே செய்து வந்தார். அதை தொடர்ந்து தமிழில் நடிகைகள் சுதா சந்திரன் மற்றும் சினேகாவுடன் ஜீ தமிழில் டிஜேடி ஜூனியர்ஸ் என்ற நடன நிகழ்ச்சிக்கு நடுவராகவும் இருந்தார். தொடர்ச்சியாக பல வருடம் கழித்து கார்த்தி நடித்த சர்தார் படத்தில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
இதையும் படிங்க : லியோ ரிலீசுக்கு அழைக்கப்பட்ட முன்னணி நடிகர்கள்… ஆப்பை நாங்களே வச்சிக்குவோம? போங்கப்பபா!
இந்நிலையில், இயக்குனர் பாலாவுடன் பணியாற்றிய சம்பவம் குறித்து தன்னுடைய பேட்டி ஒன்றில் லைலா பேசி இருக்கிறார். அதிலிருந்து, நந்தா படத்தில் நான் ஈழ பெண்ணாக நடித்திருந்தேன். அப்போது எனக்கு அந்த தமிழ் சரியாக பேச வரவில்லை. அப்போது பாலா திரும்ப திரும்ப திட்டி என்னை நடிக்க சொன்னார். அப்போது அவர் மீது எனக்கு கோபமாக வந்தது. ஒரு கட்டத்தில் இனி இந்த படத்தில் நடிக்க முடியாது எனக் கூட கூறினேன். ]
ஆனால் ஒருசிலர் பாலா சிறந்த இயக்குனர். உன் சினிமா வாழ்க்கை மாறும் என்றனர். அதேப்போலவே படத்தின் ரிலீஸ் அப்போ படத்தினை பார்த்தேன். எனக்கு மிரட்சியாக இருந்தது. நானா இப்படி நடித்திருக்கேன் என்று, பாலா காலில் விழுந்து என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் கோபத்தின் அர்த்தம் தற்போது தான் புரிகிறது எனக் கூறினேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.