More
Read more!
Categories: Cinema News latest news

ஒரு விளம்பரத்துக்கு 2 கோடியா? பெரிய தொகை கொடுத்தும் வேண்டாம் என மறுத்த சாய் பல்லவி…

Sai Pallavi: நடிகை சாய் பல்லவி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு பெரிய தொகையில் நடிக்க வந்த விளம்பர வாய்ப்பையே வேண்டாம் என மறுத்த சம்பவமும் நடந்து இருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அந்த நிகழ்ச்சியில் ஜெயிக்கவில்லை என்றாலும் மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: அஜித் கொடுத்தது ஆஃபர் இல்ல! ஆப்பு.. சும்மானாலும் இருந்திருப்பேன்! வேதனையில் தயாரிப்பாளர்

முதல் படத்தில் மலர் டீச்சராக சாய் பல்லவியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து தொடர்ச்சியாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வரவேற்பை பெற்றார். ஆனால் தமிழில் சாய் பல்லவிக்கு பெரிய அளவில் நடிக்க படங்கள் எதுவும் கிடைக்கவே இல்லை. 

என்ஜிகே, மாரி2, பாவ கதைகள், கார்கி உள்ளிட்ட தமிழ் படங்களில் மட்டுமே இதுவரை சாய்பல்லவி நடித்து இருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படம் சாய் பல்லவிக்கு பெரிய வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கோபியை காலி பண்ண காத்திருக்கும் ராதிகா… நடுக்கத்தில் ஈஸ்வரி… சிக்கிட்டீங்களே!

Published by
Akhilan

Recent Posts