நான் நடிச்ச படத்தை என் பையனாலே பாக்க முடியல! ‘ஹாட்ஸ்பாட்’ நடிகை சொன்ன ஷாக்கான தகவல்

HotSpot Movie: சமீபத்தில் ரிலீஸாகி பெரும் சர்ச்சைக்குள்ளான திரைப்படம் ஹாட்ஸ்பாட். விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கலை, சோஃபியா, ஜனனி ஐயர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வெளியான படம்தான் ஹாட்ஸ்பாட். இந்தப் படம் நான்கு கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக அமைந்தது. இந்த நான்கு பேரும் அவரவர் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமாக வெளியானது.
படத்திற்கு ஏ சர்டிஃபிக்கேட் வழங்கப்பட்டு சிறுவர்கள் பார்க்க முடியாத அளவுக்கு சென்சார் தடைவிதித்திருந்தது. படத்தின் ட்ரெய்லர் வெளியான சமயத்திலேயே பத்திரிக்கையாளர் கூட்டம் நடைபெற்றது. அப்போதே சில பத்திரிக்கையாளர் படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கை கேள்விகளால் வறுத்தெடுத்தனர். என்ன படம் இது? படமா எடுத்து வச்சிருக்கீங்க? என்றெல்லாம் கடுமையாக சாடினர்.
இதையும் படிங்க: இவர் தான் என் ஹீரோ வம்பாக நின்ற தயாரிப்பாளர்… மொத்தமா போயிடும் போங்கப்பா.. ஓபனாக சொன்ன ஹீரோ!
அந்தளவுக்கு சில விஷயங்கள் படத்தில் இருந்தன. ஆனால் படம் வெளியான பிறகு ஒரு நல்ல கருத்தை மக்களுக்கு சொல்ல வந்திருக்கிறார் என்று அதே பத்திரிக்கையாளர்கள் விக்னேஷ் கார்த்திக்கை பாராட்டவும் செய்தனர். இந்த நிலையில் ஹாட்ஸ்பாட் படத்தில் கலைக்கு ஜோடியாக நடித்த சோஃபியா படத்தை பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருந்தார்.
நடிகை சோஃபியா ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் சில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று பிரபலமானவர். அதைவிட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மனைவிதான் இந்த சோஃபியா. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் நிகழ்ச்சியில் தன் கணவருடன் பங்கேற்றிருந்தார்.
இதையும் படிங்க: எம்,ஜி,ஆர் போட்ட பிச்சைலதான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்… இப்படி சொன்ன பிரபலம் யார் தெரியுமா?…
இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். ஹாட் ஸ்பாட் படத்திற்கு ஏ சர்டிஃபிக்கேட் கொடுத்ததே எங்களுக்கு அதிர்ச்சி. அப்படி கொடுக்கிற அளவுக்கு படத்தில் எதுவும் இல்லை. நாங்கள் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை. நான் நடித்த படத்தை என் மகன் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டான். ஆனால் அவனாலேயே பார்க்க முடியவில்லை என்று சோஃபியா கூறினார்.
மேலும் நான் ஏன் பார்க்கக் கூடாது மம்மி ? என என் மகன் கேட்டான் இது ஏ சர்டிஃபிக்கேட் படம் என சொன்னேன். அதற்கு அவர் ஏ சர்டிஃபிக்கேட் என்றால் என்ன என கேட்கிறான். இதற்கு என்னால் எப்படி விளக்கம் சொல்லமுடியும்? என்று மிக வேதனையுடன் கூறினார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் ரத்தம் பட்ட மேஜை, நாற்காலிகள்!. முதல்வரானதும் பொன்மன செம்மல் செய்தது இதுதான்!..