நல்லா தூங்கி 10 வருஷம் ஆச்சி!.. அந்த பிரச்சனையால வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போச்சி.. கண் கலங்கிய டிடி

20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்தவர் டிடி. இவர் ஜோடி நம்பர் 1, அன்புடன் டிடி, காஃபி வித் டிடி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ஆனால் இவர் சில ஆண்டுகளாக விஜய் டிவி பக்கமே தலை காட்டாமல் இருந்து வருகிறார். மேலும் இவர் சமீபகாலமாக படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காஃபி வித் காதல் படத்தில் நடித்திருந்தார். மத்தகம் வெப் சீரிசிலும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க- அஜித் ஒரு சஸ்பென்ஸான ஆளு! இத செஞ்சா மட்டுமே அவர பத்தி தெரிஞ்சுக்க முடியும் – டிடி சொன்ன ஐடியா

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தன் வாழ்க்கையையே ஒரு நிகழ்வு புரட்டி போட்டுவிட்டது என்று மிக உருக்கமாக பேசியுள்ளார். அதில், எனக்கு முதலில் முட்டியில் ஒரு சிறிய பிரச்சனை இருந்தது. அதற்காக நான் அறுவை சிகிச்சை செய்தேன். ஆனால் அந்த அறுவை சிகிச்சை தவறாக முடிந்துவிட்டது.

இதனை சரிசெய்வதற்காக நான் மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்தேன். அதற்குள் எனக்கு Rheumatoid Arthritis வந்துவிட்டது. என்ன செய்தாலும், சிகிச்சை எடுத்தாலும், என்ன சாப்பிட்டாலும் இதனை குணப்படுத்த முடியாது. பல ஆண்டுகளாக பல முயற்சிகளை மேற்கொண்டுவிட்டேன். இப்போது என் நிலையை ஏற்றுக்கொண்டேன்.

என்னால் ஓட முடியாது, நீண்ட நேரம் நிற்க முடியாது, வீல் சேர் அல்லது வாக்கிங் ஸ்டிக் வைத்துக்கொண்டு தான் வெளியே செல்வேன். இதனால் பலவற்றை இழந்தேன். 10 ஆண்டுகளாக இப்படி தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் ஒரு நாள் கூட என்னால் தூங்க முடியவில்லை. தினமும் வலியுடன் வாழ்கிறேன். எனக்கு ஏன் இந்த நிலமை என்று ஆரம்பத்தில் விரக்தியில் இருந்தேன். இப்போது இதனை ஏற்றுக்கொண்டு, வாழ தொடங்கிவிட்டேன் என்று தொகுப்பாளினி டிடி அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

இதையும் படிங்க- எவ்ளோ முடியுமோ என்னை யூஸ் பண்ணிட்டு இப்ப ஒதுக்கிட்டாங்க!.. விரக்தியில் புலம்பும் டிடி….

 

Related Articles

Next Story