Connect with us
dd vijay tv

Cinema News

எவ்ளோ முடியுமோ என்னை யூஸ் பண்ணிட்டு இப்ப ஒதுக்கிட்டாங்க!.. விரக்தியில் புலம்பும் டிடி….

பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர் டிடி. இவர் சிறு வயதிலிருந்தே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ஒரு சில சீரியல்களிலும் படங்களிலும் நடித்திருந்தாலும், இவர் தொகுப்பாளராக தான் மிகவும் பிரபலமானார்.

ஜோடி நம்பர் 1, அன்புடன் டிடி, காஃபி வித் டிடி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மூலம் இவருக்கென்றே பல ரசிகர்கள் உருவாகினார்கள். முன்னணி தொகுப்பாளராக இருந்த டிடி சமீப நாட்களாக எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்காமல் இருக்கிறார்.

இதையும் படிங்க- அனிருத்தே ஓகே சொல்லிட்டாரு.. அப்ப கூட நான் செய்யல!.. டிடி சொன்ன சீக்ரெட்..

இதற்கு காரணம் என்ன என்று தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பி போய் இருந்தனர். அப்போது தான் அவருக்கு காலில் அடிபட்டிருக்கிறது என்ற செய்தி வெளியானது. குணமடைந்த பிறகு மீண்டும் தொகுப்பாளராக வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் விஜய் டிவி தன்னை ஒதுக்கிவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் டிடி புலம்பியுள்ளார். காலில் பிரச்சனை ஏற்பட்டதால், நீண்ட நேரம் நிற்க முடியாது. வாக்கிங் ஸ்டிக் அல்லது வீல் சேர் மூலம் தான் நான் பயணம் செய்கிறேன்.

வெளியே கூட அதிகமாக செல்வதில்லை. 10 ஆண்டுகளாக ஓட என்னால் ஓட முடியாது, நீண்ட நேரம் நிற்க முடியாது. இந்த நோயை குணப்படுத்தவும் முடியாது. இப்படி பட்ட சூழ்நிலையில் நான் இருந்த போது, என்னால் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன்.

நான் நினைத்த எதையுமே என்னால் செய்ய முடியவில்லை.  இத்தனை ஆண்டுகள் நான் வேலை செய்த விஜய் டிவியில் என்னால் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியவில்லை. உட்கார்ந்து கொண்டு செய்யும்படி எந்த நிகழ்ச்சியும் இல்லை என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு தான் நான் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன் என்று டிடி அந்த பேட்டியில் தெரிவத்துள்ளார்.

இதையும் படிங்க- அந்த விஷயத்துல அட்லீதான் கில்லி.. அவர மிஞ்ச வேற ஆளே கிடையாது.. வெளிபடையாக சொன்ன டிடி

google news
Continue Reading

More in Cinema News

To Top