அந்த விஷயத்துல அட்லீதான் கில்லி.. அவர மிஞ்ச வேற ஆளே கிடையாது.. வெளிபடையாக சொன்ன டிடி

ராஜா ராணி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கிய அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அட்லீ இயக்கிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. ஒரு சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட, அந்த நடிகரின் ரசிகர்களுக்கு அந்த படம் மிகவும் பிடிக்கும் வகையில் தான் இருக்கும்.

அட்லி முதன்முறையாக இயக்கியுள்ள பாலிவுட் படமான ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படிங்க- நயன்தாராவை என்னம்மா தூக்கி சுத்துறாரு ஷாருக்கான்!.. இருந்தாலும் அட்லீ இப்படி துரோகம் பண்ணக்கூடாது!..

தான் இயக்கும் முதல் பாலிவுட் படத்திலேயே முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கானை வைத்து இயக்குகிறார் அட்லீ. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல தொகுப்பாளர் டிடி, அட்லீ குறித்து பேசியுள்ளார். அட்லீயை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். மிகவும் நெருக்கமான நண்பர்.

அவர் இவ்வளவு விரைவில் இத்தனை பெரிய இடத்தை அடைந்துள்ளார். ஷாருக்கான் அட்லீயை நம்பி படம் இயக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த அளவிற்கு அட்லீக்கு திறமை உள்ளது. எவ்வளவு பெரிய மாஸ் ஹீரோவாக இருந்தாலும், அட்லீயால் அவர்களை மிக சரியாக கையாள முடியும்.

எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும், அவரை மிகவும் மாஸாக காட்ட அட்லீயால் முடியும். அட்லீ அளவிற்கு வேறு எந்த இயக்குநராலும் பெரிய ஹீரோக்களை சரியாக கையாள முடியாது. அவரின் வெற்றியையும், அவர் அடைந்துள்ள உயரத்தையும் நினைத்து நான் பெருமை படுகிறேன் என்று தொகுப்பாளர் டிடி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- அந்த வயசுலயே நான் எல்லாத்தையும் பண்ணேன்!.. பகீர் தகவலை சொல்லி அதிரவைத்த டிடி…

 

Related Articles

Next Story