Connect with us

Entertainment News

நயன்தாராவை என்னம்மா தூக்கி சுத்துறாரு ஷாருக்கான்!.. இருந்தாலும் அட்லீ இப்படி துரோகம் பண்ணக்கூடாது!..

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக பான் இந்தியா படமாக உருவாகி  உள்ள ஜவான் திரைப்படத்தில் இருந்து செகண்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது என்கிற அப்டேட்டை இயக்குநர் அட்லீ சற்று முன் வெளியிட்டுள்ளார்.

அனிருத் இசையில் ஜவான் படத்தில் இடம்பெற்ற ஃபர்ஸ்ட் சிங்கிளான ஷாருக்கானின் அதகளமான இன்ட்ரோ பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், தற்போது நயன்தாராவுடன் ஷாருக்கான் செம ரொமான்ஸ் செய்யும் வீடியோ பாடலின் ப்ரோமோவை இயக்குநர் அட்லீ வெளியிட்டு ஷாருக்கான் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தி உள்ளார்.

லக்கி சார்ம் நயன்தாரா:

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த அட்லீ நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் தந்த வெற்றி காரணமாக நயன்தாராவுக்கே மீண்டும் கோலிவுட்டில் கம்பேக் கிடைத்தது.

இயக்குநரான அட்லீக்கோ தளபதி விஜய்யின் தெறி படத்தை இயக்கும் ஜாக்பாட்டே அடித்தது. தெறி படம் ஹிட்டான சந்தோஷத்தில் மீண்டும் அட்லீயுடன் மெர்சல் மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களில் இணைந்தார் நடிகர் விஜய்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக மாறிய அட்லீக்கு பாலிவுட்டில் ஷாருக்கான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்க மும்பைக்கு பிகில் விஜய்யை போல கிளம்பிச் சென்றார். ஷாருக்கான் படம் ஒரு வழியாக ரெடியாகி ரிலீஸ் தேதி அறிவித்த நிலையில், உற்சாகத்தில் இருக்கும் அட்லீ வரும் ஆகஸ்ட் 14ம் தேதி “அய்யோடா” எனும் காதல் பொங்கும் ரொமாண்டிக் பாடலை ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

நயன்தாராவை தூக்கி சுற்றும் ஷாருக்கான்: 

இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பின்னர் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தாலும் ஒருவித டிஸ்டன்ஸ் மெயின்டெயின் செய்தே நடித்து வந்த நயன்தாரா ஷாருக்கான் படத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், இந்த பாடல் ப்ரோமோவிலேயே ஷாருக்கான் நயன்தாராவை அலேக்காக தூக்கிச் சுற்றுவதை பார்த்த ரசிகர்கள் பக்கா கெமிஸ்ட்ரி என்றும் என்ன இருந்தாலும் அட்லீ விக்னேஷ் சிவனுக்கு இப்படி துரோகம் பண்ணக் கூடாது போன்ற கமெண்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..

google news
Continue Reading

More in Entertainment News

To Top