More
Read more!
Categories: Cinema History Cinema News latest news

இந்த க்ளைமேக்ஸ் நல்லா இல்ல.. இயக்குனரை வெறுப்பேற்றிய தளபதி விஜய்..! சூப்பர் ஹிட் போச்சா..!

Thalapathy Vijay: தளபதி விஜய் எப்போதுமே ஒரு கமர்ஷியல் நாயகன் தான். ஆர்ப்பாட்டம் இல்லாத கதையை தேர்வு செய்து நடித்து விடுவார். ஆனால் ஒரு சூப்பர் ஹிட் படத்தின் க்ளைமேக்ஸை பிடிக்காமல் அந்த படத்தினையே மிஸ் செய்த கதையை இயக்குனரே தற்போது கூறி இருக்கிறார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய இயக்கத்தின் மூலம் விஜயை அறிமுகப்படுத்தினார். ஆனால் முதல் படத்தில் நிறைய நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்றாஅர். அவர் இயக்கத்தில் அடுத்தடுத்து படங்களை இயக்கி ரிலீஸ் செய்தும் பெரிய வெற்றியை பெற முடியவில்லை. அதை தொடர்ந்து வேறு இயக்குனர் படத்தில் நடிக்க வைக்க சந்திரசேகர் முடிவு செய்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: லியோ வசூல் 500 கோடி தான்… ஆனா தளபதியை அசிங்கப்படுத்த களமிறங்கிய போட்டி நடிகர்..!

அதன்படி, விக்ரமன் இயக்கத்தில் உருவான படம் தான் பூவே உனக்காக. இப்படம் மிகப்பெரிய சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. கடைசியில் காதலியுடன் செல்லாமல் விஜய் தனியாக கிளம்பி செல்வது தான் க்ளைமேக்ஸ். அதனாலே படம் விமர்சன ரீதியாகவும் ஹிட் அடித்தது.

இந்த படத்தினை தொடர்ந்து விஜயை வைத்து உன்னை நினைத்து படத்தினை இயக்க நினைத்து இருக்கிறார். ஏற்கனவே ஹிட் படத்தினை கொடுத்த இயக்குனர் என்பதால் விஜயும் ஓகே சொல்லிவிட்டார். அவருடன் ஜோடியாக லைலா நடிக்க இருந்தார்.

இதையும் படிங்க: நான் தூக்கி குளிப்பாட்டிய குழந்தை விஜய்! இப்போ பாக்க முடியாம கஷ்டப்படுறேன் – கண்கலங்கி பேசிய அந்த பிரபலம்

படத்தின் போட்டோஷூட் எல்லாம் முடிந்து விட்டது. படப்பிடிப்பும் தொடங்கி இரண்டு பாட்டு ஷூட்டிங்கும் முடிந்தது. பின்னர் விஜய் அந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார். இதற்கு காரணம் தெரியாமலே இருந்தது. தற்போது உன்னை நினைத்து பட இயக்குனர் விக்ரமனே அதுகுறித்து பேசி இருக்கிறார்.

அவர் அளித்திருக்கும் பேட்டியில், விஜய் இரண்டு பாட்டு ஷூட்டிங் முடிந்த பின்னர் என்னை பார்க்க வந்தார். சார் க்ளைமேக்ஸ் எனக்கு செட்டாகுமா எனத் தெரியவில்லை என்றார். நானும் அவருக்கு சாரி சொன்னேன். இப்போ நான் க்ளைமேக்ஸை மாத்தினால் ஒவ்வொரு காட்சிக்கும் இது விஜய்க்கு பிடிக்குமா என யோசனையிலே போய்விடும். அது என்னால் சரியாக இயக்க முடியாது. 

நான் விஜயகாந்த் படத்தினை கூட இயக்கினேன். அவரே எனக்கு எதுவும் மாற்றம் சொல்லவில்லை. என் கதை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் வேறு ஹீரோவை வைத்து இயக்கி கொள்கிறேன். நீங்க வேறு இயக்குனர் படத்தில் நடித்துகொள்ளுங்கள். நாம் நண்பர்களாகவே இருந்து விடலாம் எனக் கூறிவிட்டாராம். 

இதையும் படிங்க: ‘லியோ’ பார்த்திபனை நிஜ பார்த்திபனாக மாற்றிய ரசிகர்கள்! புகைப்படத்தை பார்த்து பார்த்திபன் கொடுத்த ரிப்ளை

Published by
Akhilan

Recent Posts