தனுஷ் கதை சொன்னப்போ அசால்ட்டா நினைச்சேன்.. ஆனா ரிலீஸில் நானே ஷாக் ஆகிட்டேன்.. சுவாரஸ்யம் சொல்லும் நடிகை..!

Dhanush: தமிழ் சினிமாவில் நடிகராக இருக்கும் தனுஷின் கேரியரில் முக்கிய படமாக இருப்பது வேலையில்லா பட்டதாரி தான். இப்படத்தில் எல்லா கதாபாத்திரமும் பேசப்பட்டது. முக்கிய கதாபாத்திரம் ஒன்று ரிலீஸ் அப்போ ஷாக் கொடுத்த சம்பவம் தற்போது வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் வேல்ராஜ் இந்த படத்தினை கதையை தனுஷிடம் சொன்ன போது உடனே நானே தயாரிக்கிறேன் என ஒப்புக்கொண்டாராம். அதில் ரகுவரன் என்ற கேரக்டரில் தனுஷ் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து அமலாபாலையும், படத்திற்கு இசையமைக்க அனிருத்தையும் அவரே தேர்வு செய்தாராம்.
இதையும் படிங்க: கடுப்பான பிக்பாஸ் டீம்.. மிட் வீக் எவிக்ஷனில் ஒரு ஆடு காலி… யாரு தெரியுமா?
விவேக்கிடம் இந்த படத்தில் நடிக்க கேட்ட போது முதலில் மறுத்து விட்டாராம். அதன் பின்னரே சரி நடிக்கிறேன் என தனுஷுக்காக ஒப்புக்கொண்டாராம். இதைப்போலவே நடிகை சரண்யா பொன்வண்ணனிடம் அம்மா கேரக்டருக்கு கேட்ட போது இந்த படத்தில் என் ரோலுக்கு என்ன இருக்கு? இதில் நடிக்க சொல்லி இருக்கீங்களே என்றாராம்.
இருந்தும் தனுஷின் பிடிவாதத்தால் படப்பிடிப்பில் நடித்து கொடுத்து இருக்கார். எப்போதும் இருப்பது போல அவர் நடிக்க இதில் எதுவுமே இல்லை என்ற மனதில் எண்ணம் இருந்ததாம். ஆனால் டப்பிங் போன போது தான் அவர் கேரக்டரின் வலுவே அவருக்கு புரிந்ததாம். இத்தனை காட்சிகள் தன் கேரக்டருக்கு இருக்கா என ஆச்சரியப்பட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: அஜித்துடன் சேர்ந்து போட்டோதானய்யா எடுத்தேன்! மூட்டைக் கட்டி மொத்தமா வழியனுப்பி வைத்த ‘விடாமுயற்சி’ டீம்
சரண்யா பொன்வண்ணன் சரியாக இருக்காது என நினைத்த அந்த கேரக்டர் ரிலீஸுக்கு பின்னர் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததாம். இதை அவர் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இந்த வருடம் அவர் நடிப்பில் குஷி திரைப்படம் மட்டுமே ரிலீஸாகியது. ஜெயம் ரவியின் ப்ரதர் படத்திலும் முக்கிய வேடம் ஏற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.