விஜய் யூஸ் பண்ண கெட்டவார்த்தை எந்தளவுக்கு என்னை பாதிச்சது தெரியுமா? பாடகி கொடுத்த ஷாக்

by Rohini |
vijay
X

vijay

Vijay at Leo: விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்த படம்தான் லியோ. அனிருத் இசையில் படம் தாறு மாறு வெற்றியடைந்தது.

படத்தின் வெற்றிவிழாவையும் படக்குழு மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள். விழாவை முடித்த கையோடு விஜய் தனது தளபதி 68 படத்தின் படப்பிற்காக தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார். லியோ படம் ஆரம்பித்ததில் இருந்து வெற்றிவிழா வரைக்கும் சிறு சிறு பிரச்சினைகள், குடைச்சல்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதையும் படிங்க: உடைந்த மனநிலையில் முடங்கி கிடக்கும் சிவகார்த்திகேயன்!.. ஓவரா ஆட்டம் போட்டா இப்படித்தான்!..

அதுவும் த்ரிஷாவுடன் ஒரு அறையில் கத்தி பேசிக் கொண்டிருக்கும் போது விஜய் கெட்டவார்த்தை போட்டு பேசியிருப்பார். அது மிகவும் பூகம்பமாக வெடித்தது. பல அரசியல் கட்சி நிர்வாகிகள் என விஜய் மீது மிகவும் கோபமடைந்தார்கள்.

அதன் பிறகு படத்தில் பீப் போட்டு அமைதிப்படுத்தி விட்டார்கள். இந்த நிலையில் லியோ படத்தில் த்ரிஷாவுக்கு டப்பிங் கொடுத்தவர் பாடகி சின்மயி. வைரமுத்து மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் ஐந்துவருட காலம் சினிமாவில் பணிபுரிவதற்கு சின்மயிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: என்னங்க ஜிகர்தாண்டா டபுள் எக்ஸில் ரஜினி, கமலா..! கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஆச்சரிய ட்வீட்..!

இப்போதுதான் படங்களில் பணிபுரிய ஆர்வம் காட்டி வருகிறார்.ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த சின்மயி லியோ படத்தில் விஜய் பேசிய கெட்டவார்த்தை எனக்கு வருத்தத்தையே ஏற்படுத்தியிருந்தது என்று கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக விஜய் கூறிய அந்த கெட்டவார்த்தையை வைத்தே தன்னை பல பேர் விமர்சித்து வந்தார்கள் என்றும் கூறினார். முதலில் இந்த வார்த்தையை கேட்கும் போது கஷ்டமாக இருந்தாலும் திரும்ப திரும்ப அந்த வார்த்தையை கேட்கும் போது பழகிவிட்டதால் தனக்கு மரத்து போன மாதிரியாகி விட்டது என்று சின்மயி கூறினார்.

இதையும் படிங்க: உயிரை காப்பாற்றிய எம்.ஜி.ஆர்!. நெகிழ்ந்து போய் பதிலுக்கு அமிதாப்பச்சன் என்ன செஞ்சாரு தெரியுமா?…

Next Story