என்னங்க ஜிகர்தாண்டா டபுள் எக்ஸில் ரஜினி, கமலா..! கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஆச்சரிய ட்வீட்..!
Karthik subbaraj: தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகள் எடுத்து அதை படமாக்கி ஹிட்டும் கொடுத்த இயக்குனர்கள் சிலரில் முக்கிய இடம் கார்த்திக் சுப்புராஜுக்கு உண்டு. அந்த வகையில் அவரின் ஜிகர்தாண்டா டபுஸ் எக்ஸில் ஒரு சுவாரஸ்ய சம்பவமும் நடந்து இருக்கிறது.
நாளைய இயக்குனர் ரியாலிட்டி ஷோ மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தவர் கார்த்தி சுப்புராஜ். இதையடுத்து கோலிவுட்டில் பிட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக கூட ஹிட் கொடுத்தது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் செய்த உதவியால் ஜீரோ டூ ஹீரோவான நடிகர்… இப்போ டாப் சூப்பர்ஸ்டாரின் மாமனாராம்..! அட..!
இதையடுத்து இவர் இயக்கிய திரைப்படம் தான் ஜிகர்தாண்டா. படம் விமர்சன ரீதியாக பலரிடத்திலும் பாராட்டுக்களை பெற்றது. வசூல் எக்கசக்கமானது. அப்படத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதே கிடைத்தது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதையா என பிரபலங்களே ஆச்சரியப்பட்டனர்.
இதையடுத்து ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பேட்ட திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக வெற்றியாகவே அமைந்தது. இந்த படத்தினை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய எந்த படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
இதையும் படிங்க: ஆசையாக துவங்கிய படம்!. எம்.ஜி.ஆர் மீது வந்த கோபம்!.. கண்ணதாசன் செஞ்ச வேலைய பாருங்க…
இதை தொடர்ந்து அவரின் ஹிட் படமான ஜிகர்தண்டாவின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. இப்படம் வரும் தீபாவளி தினத்தில் ரிலீஸாக இருக்கிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய ட்வீட்டில் ரஜினியும், கமலும் ஜிகர்தண்டா டபுஸ் எக்ஸில் நடித்திருக்கும் ஒரு போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்.
இதில் ஆச்சரியமான ரசிகர்கள் போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர். ஆனால் கார்த்திக் கமல் மற்றும் ரஜினியை ஒன்றாக இயக்க ஆசைப்பட்டதை அவரின் உதவி இயக்குனர் செய்து கொடுத்தார் என்பதையும் தன்னுடைய ட்வீட்டில் குறிப்பிட்டு இருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்: https://twitter.com/karthiksubbaraj/status/1722114115966304343