டிடி மீது காதலில் இருந்த விஜே… ப்ரோபோஸ் செய்ய இருந்த நேரத்தில் நடந்த விபரீதம்…
முக்கிய விஜே ஒருவர் தன்னுடைய காதலை டிடியிடம் சொல்ல சென்ற போது அவர் வாழ்க்கையே புரட்டிவிட்டதாக தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
விஜய் டிவியில் பிரபல விஜேவாக இருந்தவர் திவ்யதர்ஷினி. ரசிகர்களுக்கு டிடி. துள்ளலாக எக்ஸ்பிரஷனால் ரசிகர்களை கவர்ந்தவர். தொகுப்பாளினியாக கொடிக்கட்டி பறந்துவந்த சமயத்தில் தன்னுடைய நீண்டக்கால நண்பர் ஸ்ரீகாந்த் ரவிசந்திரனை திருமணம் செய்துக்கொண்டார்.
ஆனால் இவர்கள் திருமண வாழ்க்கை பாதியிலிலேயே முறிந்தது. பின்னர் டிடிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரால் நடக்க முடியாமல் இருந்தது. சில விழாக்களில் உட்கார்ந்து கொண்டே தொகுத்து வழங்கினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபகாலமாக டிடி பொது வாழ்க்கையில் இருந்து விலகியே இருக்கிறார்.
இந்நிலையில், டிடியை காதலித்து வந்ததாக விஜே ரமேஷ் நல்லையன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியது, எனக்கு தொகுப்பாளர்களில் டிடி, சிவகார்த்திகேயனை தான் பிடிக்கும். அதிலும் டிடி மீது தனி பாசமே இருந்தது. அவர் நிகழ்ச்சியை அவ்வளவு எளிதாக எடுத்து செல்வார்.
ஜோடி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் என்னுடைய நண்பர் தான். அதனால் அந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்றேன். என்னுடைய நண்பர்களும் அங்கு நிறைய பேர் இருந்தனர். டிடியை நேரில் பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அவருடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது.
அவரிடம் என்னுடைய காதலை சொல்லினால் எப்படி எடுத்து கொள்வார் என்ற பயமே என்னிடம் இருந்தது. அதனால் நிறைய நாட்கள் என் காதலை சொல்லாமல் இருந்தேன். ஒருநாள் தைரியமாக காதலை சொல்லலாம் என ஜோடி செட்டுக்கு சென்றேன். ஆனால் அப்போது தான் டிடியின் திருமண அறிவிப்பை வெளியிட்டனர்.
அது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நல்ல பெண்ணை தவறவிட்டு விட்டோமே எனக் கவலைப்பட்டேன். பின்னர் அவருக்கு திருமணம் முடிந்து விவகாரத்து கூட நடந்தது. ஆனால் அவர் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகவே இல்லை. அதனால் அவரிடம் என்னுடைய காதலை இதுவரை சொல்லவே இல்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.