Cinema News
கொட்டாங்குச்சியை வைத்து மியூசிக் போட்ட கதை!.. இன்னமும் எனக்கு மியூசிக் போட தெரியாது!.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்!..
சினிமாவில் விஜய் ஆண்டனி கடந்து வந்த பாதைகள்!.
விஜய் ஆண்டனி : தமிழ் சினிமா ரசிகர்கள் எப்படி ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் நடிகருக்கு தீவிர ரசிகர்களாக இருக்கிறார்களோ அதே போன்று திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றும் இசை கலைஞர்களுக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.அந்த வகையில் நாம் இன்று பார்க்க போகும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஆரம்ப காலங்களில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து தான் தற்சமயம் மிகப்பெரிய இசையமைப்பாளராக உருவாகி இருக்கிறார்.தற்சமயம் அவர் ஒரு நேர்காணலில் தான் கடந்து வந்த சினிமா உலகை பற்றி கூறியிருந்தார். அதில் அவர் கூறியதாவது, நான் சிறுவயதிலிருந்தே நிறைய இளையராஜா பாடல்களை கேட்டு வளர்ந்தவன் எனக்கு இசைமேல் தீராத ஆசை இருந்தது.
கையில் கொட்டாங்குச்சி வைத்துக் கொண்டு தப்படித்துக் கொண்டு நானும் ஒரு இசை கலைஞர் என்று நானே நினைத்துக் கொண்டிருந்தேன், அந்த வகையில் என்னுடைய நண்பர்கள் அனைவரும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள் என்னை எப்போதும் மோட்டிவேட் செய்து கொண்டே இருப்பார்கள்.
இதையும் படிங்க- ‘16 வயதினிலே’ படத்தில் இத யாராவது கவனிச்சீங்களா? யாரும் செய்யாததை செய்து காட்டிய பாரதிராஜா
இந்த நிலையில் நானும் ஒரு மியூசிக் டைரக்டர் என்று நானே நினைத்துக் கொண்டு சென்னைக்கு கிளம்பி வந்தேன், சென்னைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது மியூசிக் அப்படின்னா சாதாரண விஷயமே கிடையாது என்று, அப்போது தான் எனக்கு புரிந்தது என்னால் தற்சமயம் மியூசிக் போட முடியாது என்று, மியூசிக் அப்படி என்றால் சாதாரணமாக வாயில வாசிச்சாலே வந்துவிடும் அப்படின்னு நினைச்சுட்டு இருந்த எனக்கு சென்னைக்கு வந்ததுக்கு அப்புறம் தான் எல்லாமே தெரிந்தது. பிறகு மியூசிக் எப்படி கத்துகிறது அதற்கு என்ன வழி என்று ஆராய்ந்த போது தான் சவுண்ட் இன்ஜினியராக சின்ன சின்ன வேலைகளை ஸ்டுடியோவில் போய் கற்றுக் கொண்டேன்.
மேலும் நடுவர் அவரிடம் அந்த மியூசிக் ஸ்டுடியோவில் வேறு என்னெல்லாம் கற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் பெரித அளவிற்கு ஒன்றும் கற்றுக் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு டைரக்டரை திருப்தி படுத்த என்னால் முயன்ற அளவிற்கு டியூன் போட தெரியும், ஆனால் டியூன் மட்டுமே முக்கியத்துவம் அல்ல இசைக்கு ஸ்கிரீன் பிளே மற்றும் நிறைய டெக்னிகல்ஸ் சம்பந்தமா நிறைய இருக்கு. நான் என்னுடைய ஊரில் இருந்து கிளம்பி வரும்போது 50 டியூன் கையில் வைத்துக் கொண்டுதான் வந்தேன்.
இந்த நிலையில் ஓரளவிற்கு இசையை கற்றுக்கொண்டு நிறைய தயாரிப்பாளர்களிடம் சென்று பரிந்துரை செய்து வந்திருந்தேன். ஆனால் போதிய அளவிற்கு என்னால் இசையமைக்க தகுதி இல்லை என்று நிறைய தயாரிப்பாளர்கள் என்னை நிராகரித்தார்கள் இதனிடையே சரத்குமார் ராதிகா அவர்களிடம் ஒரு நாள் நேரில் சென்று அவரை பார்க்க வாய்ப்பு கிடைத்தது பிறகு அவரிடம் நான் வைத்திருந்த டியூன் எல்லாத்தையும் காமிச்சேன் அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது.
உடனே அவர் தயாரித்த சின்ன பாப்பா பெரிய பாப்பா எனும் காமெடி சீரியலில் இசையமைக்க வாய்ப்பு கொடுத்தார். அந்த ஒரு வாய்ப்பு தான் என்னை இவ்வளவு பெரிய ஆளாக மாற்றியது. அந்த சீரியலில் நான் இடைவிடாது உழைத்தேன்,அந்த பாட்டு சின்ன பாப்பா பெரிய பாப்பா அப்படின்னு கலகலப்பாக சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் கவரும் விதத்தில் அமைந்தது.
இதனை அடுத்து அந்த பாட்டு மாபெரும் ஹிட்ட்டாக சின்னத்திரையில் ஒளிபரப்பானது. இதனை அடுத்து நிறைய சின்னத்திரை சீரியல்களுக்கும் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து முதல் முதலாக டிஷ்யூம் திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு ஒருமுறைதான் அனைவருக்கும் கிடைக்கும் கிடைத்த வாய்ப்பை எப்படி நாம் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் விஷயம் இருக்கிறது.
அதில் நான் உறுதியாக இருந்தேன் டிஷ்யூம் திரைப்படத்தில் என்னால் சிறப்பான இசையை என்னால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. ஆதலால் அந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றது.
இதனை அடுத்து சுக்ரன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் பிரபல முன்னணி நடிகரான விஜய் அவர்களின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அவர்களிடம் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதுவே என்னுடைய வாழ்வில் மிகப் பெரிய வாய்ப்பாக நான் கருதுகிறேன். அந்தப் படத்திலும் சிறப்பான பாடல்களை கொடுத்ததின் மூலம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களின் ஒருவராக திகழ்ந்தேன்.
இதனையில் நடுவர் அவர்கள் விஜய் ஆண்டனிடம் நீங்கள் ஒரு முறையாவது இளையராஜா அவர்களை பார்க்க விரும்பியது உண்டா என்று கேள்வி எழுப்பினார் அதற்கு அவர் நான் ஒரு முறை ஒரு விழா மேடையில் அவரது பக்கத்தில் அமரும் வாய்ப்பு கிடைத்தது ஆனாலும் அவரிடம் நான் எதுவும் பேசவில்லை காரணம் எதற்கு அவரை தொந்தரவு பண்ணிக்கிட்டு அவரைப் பார்த்து தான் நான் வளர்ந்தேன் அவரிடம் இருந்துதான் எனக்கு இசை கற்றுக்கொள்ள ஆர்வமும் வந்தது என்று விஜய் ஆண்டனி கூறினார்.
ஆனால் இன்றும் நான் சொல்கிறேன் நான் இசையை முழுவதுமாக கற்றுக் கொள்ளவில்லை, இசையின் அளவு 100% என்றால் அதில் நான் வெறும் ஐந்து சதவீதம் கூட கற்று இருக்க மாட்டேன் அந்த அளவிற்கு இசை கடலை விட பெரியது. எனக்கு அவ்வளவாக இசையமைக்க தெரியாது ஆனாலும் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை திருப்திப்படுத்தும் வகையில் இசையை என்னால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை என்னுள் இருக்கிறது.
மேலும் மக்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதில் நான் மிகுந்த கவனத்துடன் இருக்கிறேன் என்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஒரு நேர்காணலில் எதார்த்தமாக தனது கடந்து வந்த இசை பயணங்களை பற்றி நெகிழ்ச்சியாக பகிருந்தார்.
இதையும் படிங்க- வீடு தேடி வந்த ஹீரோ.. அவர் இல்லனா அரவிந்த்சாமி ரீ எண்ட்ரி ஆகியிருக்க முடியாது…