Categories: Cinema News latest news

வெற்றிமாறன் படத்துல நான் நடிச்சிருக்க வேண்டியது… கடைசி நேரத்துல அப்படி ஆகிடுச்சி… புலம்பிய ஜி.வி.பிரகாஷ்

பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பலவற்றை செய்து வரும் ஜி.வி.பிரகாஷ், நடிப்பில், வருகிற 25ம் தேதி அடியே என்ற படம் வெளியாகவுள்ளது. மேலும் அடுத்தடுத்து கேப்டன் மில்லன், ஜப்பான், எஸ்கே 21 என பல படங்களுக்கு இசையமைக்கிறார்.

சுதா கொங்கரா இயக்கி வரும் சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி படத்திற்கு இசை அமைத்து வருகிறார். திட்டம் இரண்டு படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள அடியே திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ், கௌரி கிஷன், மிர்ச்சி விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க- மீண்டும் மீண்டுமா!. ஆளை விடுங்கடா சாமி!.. வெற்றிமாறன் செஞ்ச வேலையில் கடுப்பான விஜய் சேதுபதி!..

இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்த படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜி.வி.பிரகாஷ் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். நான் நடித்த பல படங்களுக்கு நானே இசையமைத்துள்ளேன்.

ஒரு சில படங்களுக்கு வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். நான் நடிக்கும் படத்தில் வேறு இசையமைப்பாளர் இசையமைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் வெற்றிமாறன் இயக்கயிருந்த ஒரு படத்தில் நடிக்கயிருந்தேன். அது ஒரு கிரிக்கெட் தொடர்பான படம். கடைசி நேரத்தில், தயாரிப்பாளர்கள் தரப்பில் ஏதோ சொன்னதால், படம் நின்றுவிட்டது.

அடுத்து 4,5 ஆண்டுகளுக்கு வெற்றிமாறன் பிசியாக இருக்கிறார். எனவே, அதற்கு பிறகு தான் அவர் இயக்கும் படங்களில் நான் நடிக்க முடியும். ஆனால், அது கண்டிப்பாக நடக்கும் என்று நம்புகிறேன். என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம் என்றால் அது சூரரைப்போற்று படத்திற்கு தேசிய விருது வாங்கியது என்று நினைக்கிறேன்.

நீண்ட காலமாக பலரும், சொல்லிக்கொண்டிருந்தனர். இன்னும் தேசிய விருது வாங்கிவில்லையே என்று. ஆனால் அதை எதிர்பார்க்க முடியாது. நாம் நம் வேலையை சரியாக செய்துகொண்டிருந்தால், ஒரு நாள் அங்கீகாரம் கிடைக்கும் என்று ஜி.வி.பிராகஷ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- அஜித்தை போல சொகுசு கண்ட பூனையாக மாறிய சூர்யா!.. சுதா கொங்கரா, வெற்றிமாறன் நிலைமை அவ்ளோதான் போல!..

Published by
prabhanjani