கமலை பார்த்து கத்துக்கோ!.. படப்பிடிப்பில் ரஜினியை திட்டிய பாலச்சந்தர்.. அப்ப இருந்து மனுஷன் மாறிட்டாராம்...

by Rohini |   ( Updated:2024-01-07 09:29:45  )
kamal
X

kamal

Director Balachander: தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான இயக்குனர் பாலசந்தர். அவருடைய எல்லா படங்களிலும் ஒரு தனித்துவத்தை பார்க்க முடியும். மேலும் திரைத்துறைக்கும் அப்பாற்பட்டு நம் இதயத்தை தொடுபவையாகவும் இருக்கும்.

இன்றைய இளம் இயக்குனர்களுக்கு அவருடைய படங்கள் பெரும் ஊக்கமளிப்பதாகவே இருக்கும். எம்ஜிஆர் , சிவாஜி இத்தகையவர்களை ஒரு பெரும் ஹீரோக்களாக பார்த்த நமக்கு அபூர்வ ராகங்கள் படத்தில் சினிமாவிற்கே சம்பந்தமில்லாத ஒருவரைப் போல் ஒரு நடிகரை அழைத்து வந்து நடிக்க வைத்தார் பாலசந்தார்.

இதையும் படிங்க: 80களில் குடும்பப் பாங்கான படங்களில் தெறிக்க விட்ட விசு… எப்படி நடந்ததுன்னு தெரியுமா?

ஆரம்பத்தில் இந்த நடிகரை பார்த்த பலபேர் பாலசந்தரிடம் இவரெல்லாம் ஏன்? என்பதை போல் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அந்தப் படம் போக போக பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெற அந்த நடிகரின் பெருமை வெளியே தெரிய ஆரம்பித்தது.

அவர்தான் சிவாஜி ராவ் என்கிற ரஜினிகாந்த். அதே போல் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சிரஞ்சீவி, ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயப்பிரதா மற்றும் ரமேஷ் அரவிந்த் போன்ற பிரம்மாண்டங்கள் எல்லாம் பாலசந்தரின் படைப்புகளால் உருவானவர்கள்.

இதையும் படிங்க: சர்ஜரிக்கு பிறகு அத பண்ணல.. இத செஞ்சிருந்தா நல்லா இருந்திருப்பார் – கேப்டன் குறித்து SAC உருக்கம்

இந்த நிலையில் ரஜினி ஒரு பேட்டியில் பாலசந்தர் தன்னை திட்டிய விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். ‘அவர்கள்’ திரைப்படம் ரஜினி மற்றும் கமல் நடித்து வெளியான திரைப்படம். அந்தப் படத்தின் போது ரஜினி அவருடைய காட்சியில் நடித்து முடித்து விட்டாராம்.

அதன் பிறகு கமலின் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்களாம். அந்த இடைவெளியில் ரஜினி வெளியே கிளம்பினாராம். அதை பார்த்த பாலசந்தர் ‘என்ன சிகரெட் பிடிக்க கிளம்பிட்டியா? உள்ளே ஒருத்தன் நடிச்சிட்டு இருக்கான். அவன் எப்படி நடிக்கிறானு பாரு’ என சொல்லி திட்டினாராம். அவர்தான் கமல். கமலின் நடிப்பை பார்த்து கற்றுக் கொள் என்று கூறி பாலசந்தர் திட்டியதை அந்த பேட்டியில் ரஜினி கூறினார்.

இதையும் படிங்க: ரஜினி, கமல் நடிக்க வேண்டிய படத்தில் வேற ஹீரோ!.. ஆனாலும் சொல்லி அடித்த பாரதிராஜா…

Next Story