நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழில் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட அவருக்கு இங்கு பெண் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் வெளியான பிறகு அவருக்கு ஆந்திரா, தெலுங்கானா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் திடீரென ஏராளமான பெண் ரசிகைகள் உருவாகினார்கள்.
அதன்பிறகு அவர் தமிழிலும் படங்களில் நடிக்க முடிவு செய்தார். 2018ம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அடுத்தடுத்து தெலுங்கிலும் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்தது.
இதையும் படிங்க- இந்த படமும் போச்சுன்னா நீ இன்ஸ்டா ரீல்ஸ் தான் போடணும்!.. விஜய் தேவரகொண்டாவை வெளுத்த ரஜினி ரசிகர்கள்!..
குற்றிப்ட்டு சொல்லப்போனால், கீதா கோவிந்தம் தவிற மற்ற படங்கள் எதுவும் ஓடவில்லை என்றே கூறலாம். மிகுந்த எதிர்பாப்போடு, 2022ம் ஆண்டு வெளியான லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் அடுத்ததாக விஜய்தேவரகொண்டா, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் வருகிற 1ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்திலிருந்து இதுவரை 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்த 2 பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய விஜய் தேவரகொண்டா, இந்த குஷி படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார். திருமணம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, நான் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன். குழந்தையும் பெற்றுக்கொள்வேன். ஆனால் இப்போதைக்கு இல்லை.
நேரம் வரட்டும். எனக்கு வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்வதில் உடன்பாடு இல்லை. நன்றாக பேசி, பழகி, ஒரு 4,5 ஆண்டுகள் புரிந்துகொண்டு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.மேலும் நான் திருமணம் செய்துகொண்டால், யாருக்குமே தெரியாமல், ரகசியமாக தான் செய்வேன். உங்களிடம் சொல்ல மாட்டேன் என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- அதுல ஹைலைட்டே இடுப்புதான்! ஆனால் இதில்? விஜய்தேவரகொண்டா சொன்ன பதிலால் குஷியான ரசிகர்கள்
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…
Vijay antony:…
தமிழ் சினிமாவில்…
ரஹ்மான் மற்றும்…