Connect with us

Cinema News

இந்த படமும் போச்சுன்னா நீ இன்ஸ்டா ரீல்ஸ் தான் போடணும்!.. விஜய் தேவரகொண்டாவை வெளுத்த ரஜினி ரசிகர்கள்!..

அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் இரு படங்களை தவிர விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான எந்தவொரு படமும் பெரிதாக ஹிட் அடிக்காத நிலையில், கடைசியாக அவர் மைக் டைசனையே போட்டு அடித்த லைகர் திரைப்படம் வெளியாகி அதள பாதாள தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், அடுத்ததாக சமந்தாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டா வரும் செப்டம்பர் 1ம் தேதி அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில், தமிழ் ரசிகர்களை கவரும் வண்ணம் சமீபத்தில் சென்னையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்.

இதையும் படிங்க: எக்ஸ் புருஷனுக்கு போட்டியா கோதாவில் குதித்த சோனியா அகர்வால்!.. படத்தின் டைட்டிலை பார்த்தீங்களா!..

அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய் தேவரகொண்டாவிடம், தொடர் தோல்வியை இந்த குஷி தவிர்க்குமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டாவை தற்போது ரஜினி ரசிகர்கள் அடித்து துவம்சம் செய்து வருகின்றனர்.

செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நடிகர் ரஜினிகாந்த் 6 படங்கள் தோல்வி கொடுத்த நிலையில், கடைசியாக தற்போது ஜெயிலர் படத்தின் மூலம் 500 கோடி வசூலை எடுத்துள்ளார். மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் தெலுங்கில் பல தோல்வி படங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு ஹிட் கொடுத்துள்ளார். அதே போலத்தான், சினிமாவில் வெற்றி தோல்விகள் எல்லாம் அனைவருக்குமே வரும். எனக்கும் வெற்றி கிடைக்கும் என்று பேசியிருந்தார்.

இதையும் படிங்க: அதுல ஹைலைட்டே இடுப்புதான்! ஆனால் இதில்? விஜய்தேவரகொண்டா சொன்ன பதிலால் குஷியான ரசிகர்கள்

மேலும், கோலிவுட்டில் பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை தனக்கு பிடித்திருந்தாலும், கடத்திட்டு போகணும்னு ஒருவரை நினைத்தால் அது கண்டிப்பாக அனிருத்தை தான் என பேசினார்.

தர்பார், அண்ணாத்த படங்கள் விமர்சன ரீதியாக சொதப்பினாலும், வசூல் ரீதியாக கூட சொதப்பவில்லை என்றும் அதற்கு முன்னதாக 2.0, கபாலி படங்கள் எல்லாம் ஹிட் அடித்த நிலையில், 6 படம் ஃபிளாப்புன்னு விஜய் தேவரகொண்டா எப்படி சொல்வார். அவரது வாய்க் கொழுப்பால் தான் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார். சமந்தாவின் உதவியுடன் ரிலீஸ் ஆகும் குஷி படமும் தோல்வி அடைந்து விட்டால், இனி விஜய் தேவரகொண்டா இளம் நடிகைகளை போல இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் தான் போடணும் என ரஜினி ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top