Connect with us

Cinema News

எக்ஸ் புருஷனுக்கு போட்டியா கோதாவில் குதித்த சோனியா அகர்வால்!.. படத்தின் டைட்டிலை பார்த்தீங்களா!..

காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை சோனியா அகர்வால் தனது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டைட்டிலுடன் வெளியிட்டு முன்னாள் கணவர் செல்வராகவனுக்கு அதிரடியாக செக் வைத்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் அவரது தம்பி தனுஷுக்கு ஜோடியாக நடித்து லிப் கிஸ் காட்சிகளில் எல்லாம் போல்டாக நடித்திருந்தார் சோனியா அகர்வால்.

இதையும் படிங்க: கவின் கல்யாணத்துக்கு போய் சாப்பிடல!.. லாஸ்லியாவின் கேப்ஷனை பார்த்து காண்டான பிக் பாஸ் ரசிகர்கள்!..

7ஜி ரெயின்போ காலனி:

அந்த படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனியில் தனுஷுக்கு பதிலாக ரவிகிருஷ்ணாவை சோனியா அகர்வாலுக்கு ஜோடியாக நடிக்க வைத்திருந்தார். காதல் கொண்டேன் படத்தை விட இண்டிமேசியான காட்சிகள் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் நிறைந்திருந்த நிலையில், இளைஞர்கள் அந்த படத்தை அப்படி கொண்டாடினார்கள்.

அதன் பின்னர், மீண்டும் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனியா அகர்வால் படு நெருக்கமாக நடித்திருந்தார். தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வந்த சோனியா அகர்வாலுக்கும் செல்வராகவனுக்கும் காதல் பற்றிக் கொண்ட நிலையில், இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் என சோனியா அகர்வால் ஆசைப்பட்டது தான் இருவரும் பிரிய காரணம் எனக் கூறப்பட்டது.

இதையும் படிங்க: யூடூ ப்ரூட்டஸ்!.. விஜய் முதுகில் விக்ரமும் குத்தப் போறாராம்!.. என்னடா இது லியோ வசூலுக்கு வந்த சோதனை?..

செல்வராகவனுடன் விவாகரத்து:

மேலும், ஆண்ட்ரியாவுடன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவன் காட்டிய நெருக்கம் என்றும், சோனியா அகர்வால் வேறு ஒரு நடிகருடன் தொடர்பு கொண்டார் என பல விதமான கிசுகிசுக்கள் கோலிவுட்டில் கொழுந்து விட்டு எரிந்து இருவரது விவாகரத்துக்கும் பல விதமான காரணங்களை அடுக்கின.

செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்துக் கொண்டு 3 குழந்தைகளுக்கு அப்பாவாக வாழ்ந்து வருகிறார். செல்வராகவனை பிரிந்த நிலையில், வேறு யாரையும் திருமணம் செய்துக் கொள்ளாமல் தொடர்ந்து கிடைக்கும் படங்களில் நடித்து வரும் சோனியா அகர்வால், தனது அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சோனியா அகர்வாலின் புதிய படம்:

ட்ரீம் ஹவுஸ் தயாரிப்பில் இயக்குநர் ஹரூன் என்பவர் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு 7/G என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால், சோனியா அகர்வால், வேறு ஒரு இயக்குநர் படத்தில் நடிக்க இந்த டைட்டிலை பயன்படுத்தி இருக்கிறார். 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தை செல்வராகவன் இயக்குவதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top