Connect with us

Entertainment News

கவின் கல்யாணத்துக்கு போய் சாப்பிடல!.. லாஸ்லியாவின் கேப்ஷனை பார்த்து காண்டான பிக் பாஸ் ரசிகர்கள்!..

இலங்கையில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி வந்த லாஸ்லியா பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனார். அவர் பிரபலமாக இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. அதுதான் அந்த ஷோவில் இவர் கவினை உருகி உருகி காதலித்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா – ஆரவ் காதலை பார்த்து ஆரம்பத்தில் மலைத்துப் போன ரசிகர்கள் அவர்கள் இருவரும் ஷோ முடிந்ததும் பிரிந்ததை பார்த்து ரொம்பவே சோகத்தில் ஆழ்ந்தனர்.

இதையும் படிங்க: நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த கவின்!.. வைரலாகும் திருமண புகைப்படம்!…

லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போஸ்ட்:

ஆனால், இதெல்லாம் டிஆர்பிக்கான பக்கா ஸ்க்ரிப்ட் என்பதை ரசிகர்கள் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் பிரேக்கப் ஆனபோது தான் முழுவதுமாக உணர்ந்து கொண்டனர். கவினும் லாஸ்லியாவும் நல்ல ஜோடி, இருவரும் சேரவேண்டும் என கவிலியா ஹாஷ்டேக்குகள் அதிகம் டிரெண்டான நிலையில், தற்போது கவின் மோனிகா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளது பிக் பாஸ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கவின் – மோனிகா திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில், சினிமா பிரபலங்கள் முதல் விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் வரை பலரும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், நடிகை லாஸ்லியாவுக்கு அப்படியொரு சம்பவமே நடந்தது போல தெரியாமல், நேற்று இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டு மறைமுக கேப்ஷன் ஒன்றையும் போட்டதை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒருத்தனாவது முகத்த பாக்குறானுங்களா பாரு!. பேட் பாய்ஸ்!.. தாராளமா காட்டும் தர்ஷா குப்தா!…

லாஸ்லியாவுக்கு குவிந்த ட்ரோல்:

நடிகை லாஸ்லியா தரையில், சோகமாகவும், சிரித்தபடியும் படுத்துக் கொண்டு எடுத்த போட்டோக்களை வெளியிட்டு, அதற்கு கேப்ஷனாக ”Can’t help but wonder” என கேப்ஷன் கொடுத்துள்ளார். உதவி செய்ய முடியவில்லை.. ஆனால், வியக்கேன் என்பது போல அவர் பதிவிட்டதை பார்த்த ரசிகர்கள், “நீ இப்படியே போஸ்ட் போட்டுட்டு இரு, அங்க கவின் கல்யாணமே பண்ணிட்டாரு” என்றும் ”கவின் கல்யாணத்துக்கு போய் சாப்பிடல” என்றும்  ரியாலிட்டி ஷோவில் வரும் காசுக்காக காதலை வைத்து விளையாடுவது எல்லாம் என்ன பழக்கமோ என ரசிகர்கள் லாஸ்லியாவை விளாசி வருகின்றனர்.

ஆனால், லாஸ்லியா ரசிகர்கள் எப்போதும் போல அவரது அழகான புகைப்படங்களுக்கு லைக்குகளையும், ஹார்ட்டின் எமோஜிக்களையும் பதிவிட்டு, ஹேட்டர்களின் கமெண்ட்டுகளை விட்டுத் தள்ளுங்க தலைவி அடுத்த படத்தில் வெயிட்டா நடிச்சு ஹிட்டு கொடுங்க தலைவி என ஆதரவு அளித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Entertainment News

To Top