Connect with us

Cinema News

யூடூ ப்ரூட்டஸ்!.. விஜய் முதுகில் விக்ரமும் குத்தப் போறாராம்!.. என்னடா இது லியோ வசூலுக்கு வந்த சோதனை?..

சினிமாவில் எப்போதும் நடிகர் விஜய் மற்றும் விக்ரம் இருவருமே நல்ல நண்பர்களாக திகழ்ந்து வருகின்றனர். சோஷியல் மீடியாவிலும் விஜய் மற்றும் விக்ரம் ரசிகர்கள் மத்தியில் எந்தவொரு சண்டையும் இல்லாமல் சகோதரத்துவம் மட்டுமே நீடித்து வந்த நிலையில், தற்போது விஜய் முதுகில் விக்ரமும் குத்தக் காத்திருக்கிறார் என்கிற ஷாக்கிங் நியூஸ் வெளியாகி கோலிவுட்டை குலுங்க வைத்துள்ளது.

சினிமாவில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்கிற மந்திரச் சொல் ஒன்று உள்ளது. இதுவரை பெரியளவில் விஜய் மற்றும் விக்ரம் இடையே மோதல் இல்லாமல் இருந்து வந்த நிலையில், இந்த முறை விஜய்க்கு எதிராக அதிலும் லியோ படத்தில் நடித்த நடிகரே களமிறங்கப் போவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: அஜித்துக்கு கடைசி வார்னிங் கொடுத்த லைகா நிறுவனம்!.. இதுவும் மிஸ் ஆனால், நடக்குறதே வேறயாம்!..

விஜய்யுடன் மோதுகிறாரா விக்ரம்:

லியோ படத்தில் நடித்துள்ள கெளதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம், ரிது வர்மா நடித்து பல மாதங்களாக புதைந்து கிடக்கும் துருவ நட்சத்திரம் படத்தை தூசு தட்டி எடுத்து வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியிட கெளதம் மேனன் திட்டமிட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே தேதியில் தான் விஜய்யின் லியோ படத்துக்கு தென்னிந்தியா முழுவதும் பாலகிருஷ்ணா, சிவராஜ்குமார், ரவி தேஜா உள்ளிட்டோர் ஆப்பு வைக்க ரெடியாக தங்கள் புதிய படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அந்தப் பட்டத்திற்கு தகுதியான ஆளே இல்லை! ‘சூப்பர் ஸ்டார்’ குறித்து நச் என பதிலடி கொடுத்த சத்யராஜ்

அக்டோபர் 19ல் வெளியாகிறதா துருவ நட்சத்திரம்:

தமிழில் எந்த படமும் விஜய்யின் லியோ படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆகாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சியான் விக்ரம் நான் வரேன் ராசா என துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸை தூக்கிக் கொண்டு வந்து இடைஞ்சல் கொடுக்கப் போகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திற்கு போட்டியாக ஜூலை 14ம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி கடைசி வரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அக்டோபர் 19ம் தேதி துருவ நட்சத்திரம் வெளியானால் இரு படங்களுக்கும் பெரிய பாதிப்பு இருக்கும் எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: லியோ படத்தை கைவிட்ட ரெட் ஜெயிண்ட்!.. கலக்கத்தில் தயாரிப்பாளர்!.. இது என்னடா தளபதிக்கு வந்த சோதனை!..

google news
Continue Reading

More in Cinema News

To Top